நாமக்கல், பரமத்தி ரோட்டில் ராயல் இ.வீ., பைக் ஷோரூம் உள்ளது. கடந்த, 2020ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பேட்டரி பைக் நிறுவனம், 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
சர்வதேச தரத்தில் மிக குறைந்த விலையில், பெட்ரோல் இல்லாமல் பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் விற்பனையில், முன்னணி நிறுவனமாக உள்ள ராயல் இ.வீ., பைக் ஷோரூமில் உள்ள இரண்டு சக்கர வாகனங்கள், உலக தொழில் நுட்பத்துடன் கூடிய, இந்தியா தொழில் நுட்ப கழகத்தினால் தயாரிக்கப்படும் பிபூர் இ.வீ., மின்சார எலக்ட்ரானிக், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில், ராயல் இ.வீ., பைக் ஷோரும் முன்னணியில் உள்ளனர்.
இந்த இரண்டு சக்கர வாகனங்களில் அதிகபட்சம், 60 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்க, ஒரு கிலோ மீட்டருக்கு, 12 பைசா மட்டுமே செலவாகிறது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால், 90 முதல் 120 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் வகையில் பேட்டரி திறன் கொண்டது.
இ.வீ., பைக்கில் பெட்ரோல் இல்லாமல், சுற்றுசூழலை பாதிக்கும் புகை இல்லாமல், சத்தம் இல்லாமல் பயணம் செய்வதால், இந்த, இரு சக்கர வாகனங்ளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ராயல் இ.வீ., பைக் ஷோரூம் நிர்வாகத்தினர் கூறுகையில், ''எங்கள் நிறுவனத்தின், 3ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வரும், 25ம் தேதி வரை சிறப்பு சலுகையாக, ஒரு வாகனத்திற்கு, 4 ஆயிரம் ரூபாய் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது,'' என்றனர்.