நகையை தவறவிட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம் அடுத்த கண்டிப்புதுார் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள் பாலாஜி, 39. லோகேஸ்வரன், 27. ஆவத்திபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி மணி, 55. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் மதியம், சாலையில் கிடந்த, எட்டரை பவுன் நகையை கண்டெடுத்து, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களின் நேர்மையை பாராட்டினர். இந்நிலையில் நகையை தவற விட்ட


பள்ளிபாளையம் அடுத்த கண்டிப்புதுார் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள் பாலாஜி, 39. லோகேஸ்வரன், 27. ஆவத்திபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி மணி, 55. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் மதியம், சாலையில் கிடந்த, எட்டரை பவுன் நகையை கண்டெடுத்து, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களின் நேர்மையை பாராட்டினர். இந்நிலையில் நகையை தவற விட்ட நபர்கள், குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூரைச் சேர்ந்தவர்கள் நகையை தவற விட்டிருந்தால், நகையை தேடி வந்திருப்பர் என்பதால், நகை வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் நகை காணாமல் போனதாக புகார் உள்ளதா என்று, பள்ளி பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X