தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி பலி

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
எலச்சிபாளையம் அடுத்த நல்லகுமரன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன், 54. இவர் தனது தாயார் ராசம்மாளுடன், 71, மரப்பரையில் உள்ள கோவில் கும்பாபி ேஷகத்துக்கு, எக்ஸெல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் சென்றார். காலை, 8 மணியளவில், எலச்சிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாலையை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த தனியார் கல்லுாரி பஸ்


எலச்சிபாளையம் அடுத்த நல்லகுமரன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன், 54. இவர் தனது தாயார் ராசம்மாளுடன், 71, மரப்பரையில் உள்ள கோவில் கும்பாபி ேஷகத்துக்கு, எக்ஸெல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் சென்றார். காலை, 8 மணியளவில், எலச்சிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாலையை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியது.
இதில் தாயும், மகனும் படுகாயம் அடைந்தனர். இதில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், பழனியப்பன் இறந்தார். ராசம்மாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பழனியப்பனுக்கு, ஜோதி, 48, என்ற மனைவி, ஒரு மகளும் உள்ளனர். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X