ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
''வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேலம் மண்டல அளவிலான வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி


''வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேலம் மண்டல அளவிலான வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பாபு ரெட்டி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி முன்னிலை வகித்தார்.
பின்னர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக வணிகவரி மற்றும் பத்திரப்
பதிவுத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அரசுக்கு, 57 சதவீதம் அளவில் வணிகவரி மற்றும் பதிவு துறை சார்பில் வருமானம் கிடைக்கிறது.
கொரோனா பாதிப்பு, வெள்ள பாதிப்பு மற்றும் உள்ளாட்சி தேர்தல்களினால் சற்று தொய்வு ஏற்பட்ட இத்துறையில் தற்போது ஆய்வு நடத்தப்படுவதன் மூலம், 1.04 கோடி ரூபாய் வணிக
வரித்துறையிலும், 13 ஆயிரத்து, 923 கோடி ரூபாய் பத்திரப்பதிவுத்துறையிலும் வருமானமும் கிடைத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் வணிகவரித்துறையில், 16 ஆயிரம் கோடியும் பத்திரப்பதிவுத்துறையில், 2,100 கோடியாக இருந்த வருமானம் இரட்டிப்பாகி, 4,200 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கடந்த காலகட்டங்களில் ஜி.எஸ்.டி., பதிவு பெற்று, செயல்படாத, 900 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது, 67 கோடி ரூபாயை அந்நிறுவனங்கள் தாமாக முன்வந்து கட்டியுள்ளன. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து, மாவட்ட கலெக்டர் தற்போது இடம் தேர்வு செய்துள்ளார். அப்பகுதியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட அரசாணை விரைவில் பிறப்பிக்கப்பட்டு கட்டடப் பணி துவங்கப்படும்.
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையில் இனி தவறு நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால், தவறிழைப்போர் மீது சட்டரீதியாக தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-202213:16:38 IST Report Abuse
இ.வா இந்த ஆட்சியில் ஆதாரத்துடன் புகார் அளித்தால் என்ன நடக்கும். முதலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு புகார்தாரரின் விவரங்கள் போலீசாரோ அரசு அதிகாரிகளிடம் இருந்து கொடுத்து மிரட்டல் அடி தடி போன்ற வன்முறை செய்ய நேரம் கொடுத்து பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த ஆட்சியில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X