தேசிய தடகள போட்டியில் தங்கம் அரசு கல்லூரி மாணவர் அசத்தல்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
தேசிய தடகள போட்டியில் ஆத்துார் அரசு கல்லுாரி மாணவர் தங்கம் வென்று அசத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த, விவசாயி பாரதிராஜா மகன் துரைமுருகன், 21. இவர், சேலம் மாவட்டம், ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல், 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த ஜூன், 27 முதல் ஜூலை, 1 வரை, கோவாவில் தேசிய தடகள போட்டி நடந்தது. அதில், 21


தேசிய தடகள போட்டியில் ஆத்துார் அரசு கல்லுாரி மாணவர் தங்கம் வென்று அசத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்
துறைப்பட்டை சேர்ந்த, விவசாயி பாரதிராஜா மகன் துரைமுருகன், 21. இவர், சேலம் மாவட்டம், ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல், 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த ஜூன், 27 முதல் ஜூலை, 1 வரை, கோவாவில் தேசிய தடகள போட்டி நடந்தது. அதில், 21 வயதுக்குட்பட்டோர் நீளம் தாண்டுதலில், தமிழகம் சார்பில் துரைமுருகன் மட்டும் பங்கேற்றார். அவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அவருக்கு கல்லுாரியில் பாராட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் சித்ரா, கணினி அறிவியல் துறைத்தலைவர் செல்வராஜ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், நினைவு பரிசு வழங்கி மாணவரை பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X