அடுக்கடுக்கான புகார் எதிரொலி சேலம் கோட்ட வன அலுவலர் சஸ்பெண்ட்| Dinamalar

அடுக்கடுக்கான புகார் எதிரொலி சேலம் கோட்ட வன அலுவலர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 07, 2022 | |
அமைச்சர் ஆய்வுக்கு வராதது உள்பட அடுக்கடுக்கான புகார்களால், சேலம் கோட்ட வன அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்ட வனத்துறையில் சேலம், ஆத்துார் என, இரு கோட்டங்கள் உள்ளன. அதில், சேலம் கோட்ட வன அலுவலராக, 2021 ஆகஸ்டில், கவுதம் பொறுப்பேற்றார். ஓராண்டு கூட முடியாத நிலையில், அவர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதுகுறித்து, வனத்துறை உயர் அதிகாரிகள்

அமைச்சர் ஆய்வுக்கு வராதது உள்பட அடுக்கடுக்கான புகார்களால், சேலம் கோட்ட வன அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட வனத்துறையில் சேலம், ஆத்துார் என, இரு கோட்டங்கள் உள்ளன. அதில், சேலம் கோட்ட வன அலுவலராக, 2021 ஆகஸ்டில், கவுதம் பொறுப்பேற்றார். ஓராண்டு கூட முடியாத நிலையில், அவர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதுகுறித்து, வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கோட்ட வன அலுவலர், அலுவலகத்துக்கு சரியாக வருவதில்லை. பெரும்பாலான நேரங்களில் முகாம் அலுவலகத்தில் இருந்தார். துறை ஆவணங்களில் கையெழுத்து வாங்க செல்வோம். அங்கு கேட் அருகே நிற்க வைக்கப்பட்டு, பணியாளர் வந்து ஆவணங்களை பெற்றுச்சென்று கையெழுத்து வாங்கி தருவார். இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை.
விலங்குகளை வேட்டையாடுவோருக்கு அபராதம் விதிக்க, போன் செய்தால் கூட எடுப்பதில்லை. திட்டப்பணி, இடமாற்றம் உள்ளிட்ட எந்த கோப்புகளுக்கும், 'கவர்' இல்லை எனில் கையெழுத்து கிடையாது. பாலமலையில் சாலை அமைப்பது தொடர்பாக, மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பான விபரங்களை கேட்டபோது, அவர் தெரிவிக்கவில்லை. அரசியல் செல்வாக்கில் இருந்த அவரை, கலெக்டர் சந்தித்தும் பேசினார். துறை சார்பில், மாவட்ட நிர்வாக கூட்டம், நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்பதில்லை.
இதுபோன்ற தொடர் புகார்களால், சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி விசாரித்து, சென்னைக்கு அறிக்கை ‍அளித்தார். இந்நிலையில், கடந்த, 4ல், குரும்பப்பட்டி பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இதற்கும் அவர் வரவில்லை. இதனால், கோட்ட வன அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, சேலம் வன கோட்டம், ஈரோடு மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதமுக்கு, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X