தி.மு.க.,வுக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது பா.ஜ., மாநில துணைத்தலைவர் காட்டம்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
''முதல்வர் முன்னிலையில் தனித்தமிழ்நாடு கேட்டு, எம்.பி., ராசாவின் பேச்சால், தி.மு.க.,வுக்கு ஏழரை ஆரம்பமாகிவிட்டது,'' என்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 3ம் தேதி, நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர்


''முதல்வர் முன்னிலையில் தனித்தமிழ்நாடு கேட்டு, எம்.பி., ராசாவின் பேச்சால், தி.மு.க.,வுக்கு ஏழரை ஆரம்பமாகிவிட்டது,'' என்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 3ம் தேதி, நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர்
முன்னிலையில், தி.மு.க., -- எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராசா, மாநாட்டில் பேசியபோது, 'மத்திய அரசின் இதே நிலைப்பாடு நீடித்தால், மீண்டும் பெரியார் கொள்கையை கையில் எடுத்து, தனித்தமிழ்நாடு கேட்போம்' என்று, பிரதமரையும்,
உள்துறை அமைச்சரையும் எச்சரித்து பேசினார்.
பிரிவினைவாதத்தை துாண்டும் வகையில் பேசிய எம்.பி., ராசாவின் பேச்சை கண்டிக்காமல், முதல்வர் ஸ்டாலின், கைத்தட்டி வரவேற்பு தெரிவித்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் இருந்தே, தி.மு.க.,வுக்கு ஏழரை ஆரம்பமாகி விட்டது தெரிகிறது.
பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்தோ, வலியுறுத்தியோ தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியும் நடத்த முடியாது, கட்சியும் நடத்த முடியாது என்பதை, சவால் விட்டுக் கூறுகிறேன். ஆன்மிக உணர்வுகளை மதிக்கும் தமிழகத்தில், கடவுள் மறுப்புக்கொள்கையை தி.மு.க., வலியுறுத்தினால், அதை, பா.ஜ., எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X