நடராஜரும் நானும்... இடையில் நாரதர்: தமிழிசை ‛நச்| Dinamalar

நடராஜரும் நானும்... இடையில் நாரதர்: தமிழிசை ‛நச்'

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (30) | |
சென்னை: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும் நடராஜருக்கும் இடையே நாரதர் தேவையில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. அதையொட்டி, அக்கோவிலுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை,
Tamilisai Soundararajan, NatarajaTemple, Chidambaram, Governor, தமிழிசை சவுந்தரராஜன், நடராஜர், நாரதர், சிதம்பரம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும் நடராஜருக்கும் இடையே நாரதர் தேவையில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. அதையொட்டி, அக்கோவிலுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை, சுவாமியை வழிபட படிக்கட்டில் அமர்ந்தார். அப்போது, தீட்சிதர் ஒருவர், 'இங்கே உட்காரக் கூடாது; சற்று தள்ளி உட்காருங்கள்' என கூறி அவமதித்ததாக தகவல் பரவியது. ஆனால் தன்னை அவமதித்ததாக கூறப்படும் தகவலுக்கு தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். ‛தன்னை யாரும் அவமதிக்கவில்லை' என விளக்கம் அளித்தார். ஆனாலும், அவர் அவமதிக்கப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.


latest tamil news


இதனையடுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடராஜரும்... நானும்... இடையில் நாரதர்கள் வேண்டாமே. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் தரிசனத்திற்கு சென்றபோது கோவில் நிர்வாகத்தினர் என்னை கோவிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக ஒரு இடத்தில் அமர செய்தார்கள். பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை, நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை. தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார், நான் அதற்கு அபிஷேகம் நன்றாக தெரிகிறது இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன். அதற்கு பின்பு அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். இவ்வாறு அவர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழிசையின் இந்த விளக்கம், அவர் அவமதிக்கப்பட்டதாக செய்திகளை பரப்பி வருபவர்களை நாரதர் எனக் குறிப்பிட்டு பதில் அளித்திருப்பதாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X