கோவிட் காலத்தில் அமோக விற்ற 'டோலோ 650': பல அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பெங்களூரு-'டோலோ 650' மாத்திரை தயாரிக்கும் 'மைக்ரோ லேப்' நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 20 இடங்களில், வருவமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கொரோனா தொற்று துவங்கிய, 2020ல் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளில், 'டோலோ 650' முக்கியமானதாகும். தொற்று பாதித்த பலரும், அரசின் கண்காணிப்பு மையத்துக்கு செல்ல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு-'டோலோ 650' மாத்திரை தயாரிக்கும் 'மைக்ரோ லேப்' நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 20 இடங்களில், வருவமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.latest tamil newsகொரோனா தொற்று துவங்கிய, 2020ல் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளில், 'டோலோ 650' முக்கியமானதாகும். தொற்று பாதித்த பலரும், அரசின் கண்காணிப்பு மையத்துக்கு செல்ல பயந்து, மருந்தகங்களில், இந்த மாத்திரைகளை வாங்கி வந்தனர். இதனால் இந்த மருந்து நாடு முழுதும் பிரபலமானது. 'டோலோ 650' பிரபலமானது. விற்பனையும் ஜரூராக இருந்தது.
இந்நிலையில், இந்த மாத்திரையை தயாரிக்கும், 'மைக்ரோ லேப்ஸ் நிறுவனம்' வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்நிறுவனத்துக்கு சொந்தமான பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள அலுவலகம் உட்பட டில்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழகம், கோவாவிலுள்ள அலுவலகங்கள்.நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் தலீப் சுரானா, இயக்குனர் ஆனந்த் சுரானா வீடு என, 40 இடங்களில் இன்று வரை விடிய, விடிய ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.


latest tamil newsகொரோனா நேரத்தில், பலரும் தொழில் நஷ்டம், வேலையின்றி தவித்து வந்தனர். ஆனால் இந்நிறுவனமோ, 350 கோடி மாத்திரைகள் விற்று, 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் கிடைத்தவை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-ஜூலை-202215:56:32 IST Report Abuse
Priyan Vadanad 55461 கோடி லாபம் சம்பாதிக்கும் அம்பானி 1722 கோடி வரி காட்டுகிறாராம். மீதி அவருக்கு. நமது நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறாரா அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்கிறாரா எனபது தெரியவில்லை. நமது நாட்டில் முதலீடு செய்து நமது மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தால் நல்லது.
Rate this:
07-ஜூலை-202218:32:27 IST Report Abuse
ஆரூர் ரங்அம்பானியின் நிறுவனத்தில் அவரைத் தவிர பல லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். லாபத்தில் டிவிடெண்ட்🤔 வரியை அவர்கள் தனித்தனியாக கட்டுகிறார்கள். அன்னிய MNC க்களின் தூண்டுதலில் உள்நாட்டு தொழிலதிபர்களை கேவலப்படுத்தும் வழக்கம் முடிவுக்கு வரவேண்டும்....
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-ஜூலை-202215:36:07 IST Report Abuse
Priyan Vadanad வரி ஏய்ப்பு செய்கிறவர்கள்தான் உலகமகா பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அரசு பெருந்தலைகளின் நண்பர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? டோலோ 650' முதலாளிகள் அரசு பெருந்தலைகளுக்கு நண்பர்கள் இல்லை.
Rate this:
Cancel
07-ஜூலை-202215:33:31 IST Report Abuse
ஆரூர் ரங் இது பாராஸிடமால் எனும் சாதாரண காய்ச்சல் வலி மாத்திரை பிராண்ட். இதே மாத்திரை ஆயிரக்கணக்கான பிராண்ட் பெயர்களில் கிடைக்கிறது..தமிழகத்தைச் சேர்ந்த 100 நிறுவனங்களுக்கு மேல் உற்பத்தி செய்கின்றன . என்ன காரணத்தினாலோ இந்த ஒரே பிராண்டு டாக்டர்களால் அதிகமாக சிபாரிசு🤔 செய்யபட்டது. வரிஏய்ப்பு இருந்தால் ரெய்டில் தவறில்லை. ஆனால் சர்வதேச MNC மருந்து நிறுவனங்களின் கூட்டு சதியால் ரெய்டா என்பதையும் நோக்கவேண்டும். தொழிற்போட்டியால் இதுபோ‌ன்ற பல இந்திய நிறுவனங்களைக் கெடுத்த வரலாறு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X