எளிய முறையில் நடந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் திருமணம்

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்தினார்.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், 48, ஏற்கனவே இந்தர்ஜீத் கவுர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2015ல் கருத்து வேறுபாடு காரணமாக இந்தர்ஜீத் கவுரும், பகவந்த் மானும்
Punjab CM, Bhagwant Mann, Ties Knot, Dr Gurpeet Kaur, Ceremony, Chandigarh, பஞ்சாப், முதல்வர், பகவந்த் மான், திருமணம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்தினார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், 48, ஏற்கனவே இந்தர்ஜீத் கவுர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2015ல் கருத்து வேறுபாடு காரணமாக இந்தர்ஜீத் கவுரும், பகவந்த் மானும் பிரிந்தனர். பகவந்த் மான், பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற போது, அமெரிக்காவில் இருந்து வந்த இரு குழந்தைகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தங்கள் குடும்பத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய 32 வயதான டாக்டர் குர்பிரீத் கவுர் என்ற பெண்ணை, பகவந்த் மான் திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.


latest tamil news


இரண்டாவது திருமணம் என்பதால், ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டு, மிகவும் எளிமையாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்காக, பகவந்த் மானின் அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர், சொந்த ஊரான சடோஜ்ஜில் இருந்து, முதல்வரின் இல்லத்திற்கு வந்தனர். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மானின் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் குர்பிரீத் கவுரை திருமணம் செய்தார் பகவந்த் மான். தம்பதிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜூலை-202219:45:31 IST Report Abuse
Ramesh Sargam பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இவரும் நமது தமிழக முந்தைய முதல்வர் மறைந்த 'மாமனிதர்' வழியில் செல்ல விரும்புகிறார். ஆம், பல திருமணங்கள். பிறகு, பல வழியில் மாநிலத்தை கொள்ளையடிப்பது. "வாழ்த்துக்கள், மான் அவர்களே"
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
07-ஜூலை-202217:01:46 IST Report Abuse
DVRR மிக மிக சிறு வயது வெறும் 48 வயது தான். இவன் முதல் மந்திரி???7 வருடத்திற்கு முன் முதல் பொன்டாட்டிடியை விவாகரத்து செய்தானாம்???இப்போ அவளும் 2 குழந்தைகளும் அமெரிக்காவில்???ஆனால் இவன் பஞ்சாபி முதல் மந்திரி???இவன் புஞ்சாபி நாட்டை கவனிப்பவன்???ஆம் ஆத்மி பார்ட்டி என்ன பொருத்தம் இந்த பொருத்தம்?????அரசியல் ஒரு சாக்கடை அதில் எது உழலும் அன்று எ(அ)ருமையாக எடுத்துக்காட்டுகின்றார்கள்.
Rate this:
mohan - chennai,இந்தியா
07-ஜூலை-202221:45:13 IST Report Abuse
mohanமனைவி என்கின்ற பெயரில் வரும் பெண்கள், கணவர்கள் என்னதான் பொருத்தமாக நடந்து கொண்டாலும்., ஒரு சில பெண்களுக்கு அதிகப்ரசங்கி தானம் போவதில்லை...கணவர்கள், தன வேலையும், குடும்பத்தையும் நன்கு கவனித்து வந்தால், ஒரு சில பெண்கள், ஆமா..என்ன வேலை செய்கிறீர்கள்...பக்கத்துக்கு வீட்ல பாருங்க..கார் வாங்கீட்டாங்க...நீங்க இன்னும் பழைய பைக் வச்சு இருக்கீங்க..என்று எல்லா விதத்திலும், உண்மையை உணர்ந்து கொள்ளாமல், பிரச்சனை செய்வர்...இதனால், தான், ஒரு சில பிரபலங்கள் கூட, சொத்து இருந்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்...ஆகையால், உண்மை என்ன என்று உணராமல், ஒரு மாநிலத்தின் முதல்வரை, இப்படி பேசுவது....இந்தியாவில், பெண்களை, தெய்வமாகவும், மஹாலட்சுமியாகவும், வலி படுகின்றனர்..யாராவது, ஒரு சில பெண்கள், அல்லது ஆண்கள், உணர்ந்து கொள்ளாமல் செய்யும் செயல்கள், குடும்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கிறது......
Rate this:
Cancel
V VIJAYENDRAN - CHENNAI,இந்தியா
07-ஜூலை-202215:59:26 IST Report Abuse
V VIJAYENDRAN அருமை தலைவர் ஆவதற்கு எல்லா தகுதியும் இவருக்கு இருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X