வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவண்ணாமலை: பொய், புரட்டு பேசுபவர்கள் குறித்து ‛ ஐ டோன்ட் கேர்' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில், ரூ.340 கோடி மதிப்பிலான 246 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ஸ்டாலின் பேசியதாவது: அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றது. கருணாநிதி முயற்சியால், கோயில் கட்டி காத்தது திமுக அரசு. மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இது தெரியாது. நீர்மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இதேபோன்ற சாதனையை அனைத்து மாவட்டங்களும் செய்ய வேண்டும். அருணாசலாஸ்வரரை தரிசனம் செய்யவும்,கிரிவலம் செல்லவும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தரும்.

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல. ஆன்மிக போலிகள்.வியாதிகள்.நாங்கள் மதத்தை வைத்து ஆட்சி நடத்தவில்லை. மக்கள் முன்வைத்து கட்சி ஆட்சி நடத்துகிறோம்.கோவிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா என கேட்கிறார்கள்.அனைத்து துறை வளர்ச்சி பெறுவது தான் திராவிட மாடல்
ஆன்மிகத்தின் பெயரால், அரசியல் நடத்த முயற்சி செய்கிறார்கள்.

ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. மனிதர்களை பிளவுபடுத்தும கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. அறநெறியை கொண்ட ஆட்சி நடத்து வருகிறோம். போலியான பிம்பங்களை கட்டமைப்பவர்களுக்கு பொய்களும் தான் தேவை. மக்களுக்கு தேவையான கல்வி, வேளாண்மை புதிய தொழில் தமிழகம் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவது தான் திராவிட மாடல்.
அறிவார்ந்த யாரும் அரசுக்கு ஆலோசனை சொல்லலாம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும். இது தேர்தல் காலம் அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலம். பொய், புரட்டு கூறுபவர்கள் குறித்து ‛ஐ டோன்ட் கேர்'. மக்களும் அப்படியே நகர வேண்டும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் மக்கள் பணியாற்றி வருகிறேன். கோப்புகள் முடங்கி விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.