பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி: இந்தியா சாதனை

Updated : ஜூலை 09, 2022 | Added : ஜூலை 09, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 2021- 22 நிதியாண்டில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்த நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதில் 70 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும், 30 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி ஆகியுள்ளது.அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும்
India, defence export, private sector

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த 2021- 22 நிதியாண்டில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்த நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதில் 70 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும், 30 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி ஆகியுள்ளது.அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.
latest tamil news

முக்கியமாக கடந்த ஜனவரி மாதம் ரூ.2,770 கோடி மதிப்பில் பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கும் அந்த ஏவுகணை ஏற்றுமதி செய்வதற்கு வழி வகுத்தது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020 21 நிதியாண்டில் ரூ.8,434 கோடி அளவுக்கும், ரூ.2019-20 ல் ரூ.9,115 கோடிக்கும், ரூ.2015- 16 ல் ரூ.2,059 கோடி அளவுக்கும் ஏற்றுமதி ஆகியிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (11)

Muralidharan raghavan - coimbatore,இந்தியா
09-ஜூலை-202214:50:58 IST Report Abuse
Muralidharan raghavan மோடி அரசின் சாதனை பார்ட்டுக்குரியது. நாம் என்னதான் தானியங்கள், துணிகள், உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்தாலும், ராணுவ தண்டவாளங்கள் ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் லாபம் மற்றவற்றில் கிடைக்காது. மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு ராணுவ தளவாட ஏற்றுமதி ஒரு முக்கிய காரணம் ஆகும்.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
09-ஜூலை-202214:38:28 IST Report Abuse
Dharmavaan ஆயுத இறக்குமதியில் கமிஷன் அடித்த காங்கிரஸ் காலத்தில் நடந்திருக்குமா என்று மோடியை பலிக்கும் தேச விரோதிகளெண்ணி பார்க்கட்டும்.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
09-ஜூலை-202214:20:06 IST Report Abuse
G.Kirubakaran இது மோடி அரசின் அளப்பரிய சாதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X