அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி..!

Updated : ஜூலை 09, 2022 | Added : ஜூலை 09, 2022 | |
Advertisement
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 50 இன்ச் டிவியான ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவியை கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பேசில் லெஸ் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவி, HDR10, HDR10+ மற்றும் HLG ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் MEMC எனும் புதிய தொழில்நுட்பத்துடன், ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும்
Oneplus, Oneplus50inchTV, 50inchTV, Onplus Y1sPro,  ஒன்ப்ளஸ், 50இன்ச்டிவி, Y1sPro, HDR10, HDR10+,  4K UHD, Amazon, Oneplus Store, அமேசான், dinamalar, dinamalar news, dinamalardaily, தினமலர், தினமலர்செய்தி, தினமலர்டாட்காம்,

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 50 இன்ச் டிவியான ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவியை கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பேசில் லெஸ் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவி, HDR10, HDR10+ மற்றும் HLG ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இந்த டிவியில் MEMC எனும் புதிய தொழில்நுட்பத்துடன், ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ஸ்மார்ட் மேனேஜர் வசதியின் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 ஆகியவற்றை இணைத்துக் கொள்ள முடியும்.latest tamil newsஇந்த டிவியில் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன. இதில் திரைப்படங்களை பார்க்கும் போது, 4K UHD தொழில்நுட்பம் காரணமாக திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தை பெறலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும்.

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.32,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆன்லைன், ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த டிவியை வாங்கலாம்.


latest tamil news
சமீபத்தில் வெளியான 43 இன்ச் டிவிக்கு கிடைத்தது போலவே, அசத்தல் அம்சங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகமாகியுள்ள ஒன் பிளஸ் நிறுவனத்தின் இந்த 50 இன்ச் டிவிக்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X