சென்னை: சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி வீட்டில் உள்ள ஒரு அறையில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த மே மாதம் 18 ம் தேதி சோதனை நடத்தினர். இது தொடர்பாக கார்த்தியிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி வீட்டில் உள்ள ஒரு அறையில் 6 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த முறை சோதனை நடந்த போது, அந்த அறையில் உள்ள ஒரு பீரோவின் லண்டன் சென்ற சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்தது. தற்போது அவர்கள் வந்த பிறகு சாவியை பெற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்த போது, சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் வீட்டில் இல்லை.