பன்னீர்செல்வம் நீக்கம்: பதிலுக்கு பழனிசாமியை நீக்கிய பன்னீர்

Updated : ஜூலை 11, 2022 | Added : ஜூலை 11, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க.,வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம்: கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவது, திமுக
aiadmk, general seceretary, admk, o.paneerselvam,  paneerselvam,  அதிமுக, பொதுக்குழு, பன்னீர்செல்வம்,ஓ.பன்னீர்செல்வம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க.,வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம்: கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவது, திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டி பேசுவதும், அக்கட்சி தலைவர்களுடன் நட்பு வைத்து கொண்டு கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார். தான் கையெழுத்து போட்டு கொடுத்த பொதுக்குழுவுக்கு எதிராக புகார் அளித்தது , நிர்வாகிகள் எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு தொடர்ந்தது, அமைச்சரவை கூட்டு பொறுப்பு என்பது தெரிந்தும், அதிமுக அரசின் செயல்களை விமர்சித்து பேசியும், விளம்பரம் கொடுத்தது ஆகிய பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் கட்சிக்கு எதிரானது. கட்சியின் நன்மை கருதி சட்ட விதி 35ன் படி பொருளாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.

அதேபோல், கட்சியின் நலனுக்கும், விதிகளுக்கு எதிராகவும் , பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பி.எச்.பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது எனவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.



பன்னீர்செல்வம் பேட்டி


latest tamil news


இந்நிலையில் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: நான் கழக சட்டப்படி கோடிக்கணக்கான தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ யாருக்கும் உரிமை இல்லை. இவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குகிறேன். மேலும் சட்டரீதியில் நான் போராடி வெற்றி பெறுவேன் இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
11-ஜூலை-202223:13:21 IST Report Abuse
Manguni பன்னீர் அரசியல் வாழ்க்கை இன்றோடு ஒழிந்தது. ஊழல் அரக்கன்.
Rate this:
Cancel
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
11-ஜூலை-202222:30:10 IST Report Abuse
Jayaraman Pichumani ஆளாளுக்கு செத்து செத்து விளையாடறாங்க
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
11-ஜூலை-202216:37:38 IST Report Abuse
David DS .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X