நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவுக்கு மீண்டும் சம்மன்

Updated : ஜூலை 12, 2022 | Added : ஜூலை 11, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்' நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில்,
sonia, soniagandhi, national herald, enforcement directorate, ED, சோனியா, சோனியாகாந்தி, அமலாக்கத்துறை, நேஷனல் ஹெரால்டு, சோனியா, சம்மன், காங்கிரஸ், காங்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்' நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. இந்தக் கடனில் இருந்து விடுபடுவதற்காக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகனும், எம்.பி.,யுமான ராகுல் உள்ளனர். இந்த பரிமாற்றம், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் வகையில் நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா மற்றும் ராகுலுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதில், ராகுல் பல முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.


latest tamil news


அதேநேரத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், சோனியா கடந்த மாதம் ஆஜராகவில்லை. மேலும், டாக்டர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதற்கு கால அவகாசம் கோரியிருந்தார். இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வரும் 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சோனியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
17-ஜூலை-202211:57:20 IST Report Abuse
bal ராகுல் கூட்டத்தை வைத்து போராட்டம் செய்தான். அது போல இவங்களும் செய்யணுமே..வடிவேலு படகு போட்டிக்கு போன கதை தான்.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
13-ஜூலை-202207:32:58 IST Report Abuse
ravi கான்-கிராஸ் ஊழல்களை விசாரிக்க தற்காலிகமாக மருத்துவமனைகளில் நீதிமன்றங்களை அமைக்கவும்.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
13-ஜூலை-202207:31:23 IST Report Abuse
ravi ஏதாவது தகிடுதத்தம் செய்து தப்பிக்க பார்க்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X