வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-அ.தி.மு.க.,வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துணைப் பொதுச் செயலர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு, பழனிசாமி ஆதரவாளர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
![]()
|
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு, துணைப் பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு உரியோரை பொதுச் செயலர் நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த முறை எத்தனை பேர் நியமிக்கப்படுவர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், துணை பொதுச் செயலர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
![]()
|
துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த கே.பி.முனுசாமி உட்பட பலரும், விருப்பம் தெரிவித்துள்ளனர்.அதேபோல், கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிபோக உள்ளது. அப்பதவிக்கும் முன்னாள் அமைச்சர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சமுதாய ரீதியாக பதவிகளை முன்னாள் அமைச்சர்கள் கேட்பதால், பழனிசாமி முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.