கனவுக்குள் கனவு..! 'இன்சப்ஷன்'-ல் நோலன் சொன்னது உண்மைதான்-சொல்கிறது விஞ்ஞானம்

Updated : ஜூலை 12, 2022 | Added : ஜூலை 12, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
காலையில் விழித்து படுக்கையை மடித்துவைத்து, பல் துலக்கி, சமயலறை சென்று காபி தயாரித்து, ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்து சோபாவில் கால்மேல் கால் அணிந்தமர்ந்து காபி அருந்துகிறீர்கள்....பின்னர் மீண்டும் விழித்து படுக்கை மடித்துவைத்து பல் துலக்கி, சமையல் அறை சென்று காபி தயாரித்து, ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்து சோபாமீது கால்மேல் கால் அணிந்தமர்ந்து காபி அருந்துகிறீர்கள்.
கனவுக்குள்கனவு, இன்சப்ஷன், கிறிஸ்டோஃபர்நோலன், ChristopherNolan, falseawakening, luciddreaming

காலையில் விழித்து படுக்கையை மடித்துவைத்து, பல் துலக்கி, சமயலறை சென்று காபி தயாரித்து, ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்து சோபாவில் கால்மேல் கால் அணிந்தமர்ந்து காபி அருந்துகிறீர்கள்....பின்னர் மீண்டும் விழித்து படுக்கை மடித்துவைத்து பல் துலக்கி, சமையல் அறை சென்று காபி தயாரித்து, ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்து சோபாமீது கால்மேல் கால் அணிந்தமர்ந்து காபி அருந்துகிறீர்கள். (இம்முறை சற்று அலர்டாக). மீண்டும் காலையில் விழித்து படுக்கை, போர்வை மடித்து பல் துவக்கி....என இந்த சுழல் மீண்டும் மீண்டும் தொடர்கிறது.


latest tamil newsபின்னர்தான் தெரிகிறது நீங்கள் கனவுச் சுழலில் சிக்கியுள்ளீர்கள் என்று....பின்னர் ஒரு வழியாக கனமாக உணரும் உடலை சிரமப்பட்டு நகர்த்தி கண் விழித்து சோம்பல் முறித்து எழுகிறீர்கள்...ஆனாலும் உங்களுக்குள் சந்தேகம்....இது கனவா, நனவா என்று. எல்லாரும் செய்வதுதான்..கையை கிள்ளிப் பார்க்கிறீர்கள். இம்முறை உடல் சோர்வு, கண் எரிச்சல் புதிதாக உங்களுடன் இருப்பதால் இது நிஜம் தான் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறீர்கள். டைம் லூப் படக் காட்சிபோல இருந்தாலும், இது கனவு பற்றிய கட்டுரை..!

இதுபோன்ற நிகழ்வை நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து இருப்போம். இதற்குப் பெயர் 'ஃபால்ஸ் அவேக்கனிங்' (பொய்யான துயில் எழுதல்). இதனை வைத்தே பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இன்சப்ஷன் என்ற கனவுக்குள் கனவு உண்டாகும் படத்தை எடுத்தார். இந்த படம் உலகம் முழுக்க வெளியாக வசூலில் சக்கைபோடு போட்டது. சரி.,,! ஃபால்ஸ் அவேகனிங் வகைகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

ஃபால்ஸ் அவேகனிங் ஏன் உண்டாகிறது?


latest tamil newsகாலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு எழ வேண்டும் என்கிற பயம் கலந்த உணர்வு காரணமாக ஏற்படலாம்.

அயராப் பணிகள் காரணமாக சரியான தூக்கமின்றி குறைவான நேரம் தூங்குதல்

அலுவலக வேலையில் உண்டாகும் பதற்றம்

தூக்கம் வராமல் தவிக்கும் உடல் குறைபாடு (இன்சோம்னியா)

ஸ்லீப் ஆப்னியா (குறட்டை தொல்லை)

ஸ்லீப் பராலிசிஸ்

ஃபால்ஸ் அவேகனிங் உடன் ஒத்த ஓர் பிரச்னையாகக் கருதப்படுவது ஸ்லீப் பெராலிசிஸ். ஆனால் இது சற்று வித்யாசமானது. ரெம் (ரேண்டம் ஐ மூவ்மெண்ட்) ஸ்லீப் எனப்படும் கனவு காணும் தூக்க நிலையில் இருந்து உங்கள் மூளை விழித்துக்கொள்ளும். ஆனால் உடல் விழிக்காது. மூளை விழிப்புடன் இருப்பதால் உங்கள் உடலை அசைக்க முயல்வீர்கள். எழுந்து அன்றாட பணிகளை செய்ய முயல்வீர்கள். ஆனால் உடல், கை, கால்களை கனமாக உணருவீர்கள். இதனால் அவற்றை மூளையின் கட்டளைப்படி அசைக்க முடியாது.

இதனால் சற்று பதற்றமும் அடைவீர்கள். இதுதான் ஸ்லீப் பராலிஸிஸ். ஆனால் சில விநாடிகளில் கை, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளையில் கட்டுப்பாட்டை கேட்கத் துவங்கும். தூக்கம் கலைந்தாலும் பரவாயில்லை, ஒருவழியாக எழுந்தால் போது என நினைத்து எழுவீர்கள். சில சமயங்களில் கனவுக்குள் பேச முயல்வீர்கள், ஆனால் பேச முடியாது, கையை அசைக்க முயல்வீர்கள், கை மரத்துப் போனது போல இருக்கும். இது போன்ற ஸ்லீப் பராலிசிஸ் கனவுகள் பயத்தை உண்டாக்கும்.

லுசிட் ட்ரீமிங்

இது ஓர் மகிழ்ச்சியான அனுபவம். கனவுகள் சில, நம்மை பள்ளத்தாக்கில் தள்ளிவிடும், குத்தி கொலை செய்யும், கடலில் தூக்கி வீசும். இதுபோன்ற அச்சுறுத்தும் கனவுகளை அனைவரும் 'ரெம்' தூக்கத்தில் கண்டிருப்போம். ஆனால் சில சமயங்களில் உடல் போதுமான தூக்கம் பெற்று முடித்து மூளை விழிப்படையும். ஆனாலும் ரெம் தூக்கம் நிற்காது. அப்போது நம்மால் கை, கால்களை அசைக்க முடியும், ஏன்..! படுக்கையில் இருந்து பாதி எழக்கூட முடியும். ஆனாலும் கனவு மூளையில் ஓடிக்கொண்டு இருக்கும். இதற்குப் பெயர் லுசிட் டிரீமிங். இது சில விநாடிகளே நீடிக்கும். இந்த நேரத்தில் உங்களால் உங்கள் மூளையை கட்டுப்படுத்த முடிவதால், உங்களூக்கு கனவை மாற்றி அமைக்கும் சக்தி வந்துவிடும்.


latest tamil newsஎனவே நம்மில் பலர் இந்த நிலையில் சோகமான கனவு நிறைவடையும்போது அதன் கிளைமேக்ஸை மகிழ்ச்சியானதாக மாற்ற முயல்வோம். உதாரணமாக நீங்கள் மலை உச்சியில் இருந்து குதிப்பதாக கனவு வந்தால் பாதி குதித்துக்கொண்டிருக்கும்போது திடீரென பாராசூட் திறந்து நீங்கள் பாதுகாப்பாக தரையிரங்குவதுபோல கனவை மாற்றியமைக்க முடியும்..! இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இவ்வாறு கனவை மகிழ்ச்சிகரமாக மாற்றுவதால் ஒருவித மன நிம்மதி கிடைக்கும். உற்சாகத்துடன் எழுந்து நாளைத் துவக்குவீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muga Kannadi - chennai,இந்தியா
13-ஜூலை-202209:59:54 IST Report Abuse
Muga Kannadi சில பேர் தூங்குவது போல நடிக்கிறார்கள் அவர்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது ?
Rate this:
Cancel
பாலா - chennai,இந்தியா
12-ஜூலை-202218:13:12 IST Report Abuse
பாலா அங்கன படம் எடுக்கறவக வேற லேவலுக்கு போயிட்டாக இங்கன அதே குத்தாட்டம் அப்பால நாயகன் இங்கன அடிச்சா எதிரி வேற கிரகத்துக்கு போயீ விளற மாதிரி காட்டி நம்பள சந்தோச படுத்தறாங்கோ
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
12-ஜூலை-202217:25:17 IST Report Abuse
DVRR கனவு என்பது கொண்டு வருவது யார் உங்கள் உள்ஆத்மா. கனவு மிக மிக மிக சில சமயம் தான் கலர் கலராக வரும் மிக அதிகமான சமயம் Black and White தான் வரும். கனவு வீடியோ தான் வரும் வெறும் இமேஜ் வருவதேயில்லை. கனவு உங்கள் முந்திய ஜென்மம் இனி வரப்போகும் ஜென்மம் இதில் நீங்கள் யார் என்று கூட சில சமயங்களில் வரும்.............இப்படி நிறைய இன்பர்மேஷன் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X