அ.தி.மு.க., தலைமை அலுவலக சீல் அகற்றக்கோரி மனு

Updated : ஜூலை 12, 2022 | Added : ஜூலை 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை (ஜூலை 13) விசாரணைக்கு வர உள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன்பு பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அடிதடி சண்டை நடந்தது.
அதிமுக, பழனிசாமி, பன்னீர்செல்வம், chennaihighcourt, edapadi palanisamy,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை (ஜூலை 13) விசாரணைக்கு வர உள்ளது.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன்பு பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அடிதடி சண்டை நடந்தது. இதனால், பொன் விழா ஆண்டை கொண்டாடும் வேளையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




400 பேர் மீது வழக்கு

தலைமை அலுவலகம் முன்பு நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது 3 தனித்தனி பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகாரின் பழனிசாமி ஆதரவாளர்கள் மீதும், பழனிசாமி ஆதரவாளர்கள் புகாரில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




நாளை விசாரணை

அ.தி.மு.க., அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயணன் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



புகார்

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை அள்ளி சென்றதாக பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 300 ரவுடிகளுடன் அத்துமீறி நுழைந்து, கதவை உடைத்து, விலையுயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை அள்ளி சென்றதாகவும் போலீசில் அளித்த புகாரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - KARAIKUDI,இந்தியா
12-ஜூலை-202214:19:43 IST Report Abuse
periasamy கணம் கோட்டார் அவர்களே முன்பே அம்மாவாசை க்கு சாதகமான தீர்ப்பை கொடுத்து இருவருக்கும் சம வாய்ப்பு அளிக்கவில்லை எனவே இந்த திறவுகோலையும் எம்ஜியார் மாளிகையும் ஓ பி எஸிடம் தந்து மறுக்கப்பட்ட நீதியை சரி செயுங்கள்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-ஜூலை-202212:52:53 IST Report Abuse
சீனி அறிவாலத்தில் தான் சாவி பத்திரமாக உள்ளதாம், கோர்ட் உத்தரவு வந்தவுடன் தங்கத்தட்டில் வைத்து பழனிச்சாமியிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்.. ஹாஹாஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X