ஆசிய பங்குச்சந்தைகளின் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 304 புள்ளிகளும், நிஃப்டி 101 புள்ளிகளுடன் சரிவுடன் துவங்கின.
இன்றைய (ஜூலை 12) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்
சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்து 54,090 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 101 புள்ளிகள் சரிந்து 16,115 புள்ளிகளுடன் துவங்கின. அதானி பவர், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி உள்ளிட்ட மின் துறை சார்ந்த பங்குகள் 1 சதவீதம் ஏற்றம் கண்டன. என்.எம்.டி.சி, ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட உலோகத்துறை பங்குகள் 1 சதவீதம் இறக்கத்தை கண்டன.![]()
|
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் குறித்த அதிகாரபூர்வ விவரங்களுக்கு முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். பணவீக்கம் 7 சதவீதத்திற்கு அதிகமாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த கூடுமென கூறப்படுகிறது. காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்து 54.214 புள்ளிகளுடனும், நிஃப்டி 63 புள்ளிகள் சரிந்து, 16,152 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ரூபாய் மதிப்பு தொடர் சரிவு :
இந்திய பங்குச்சந்தைகள் சரிவின் தொடர்ச்சியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து, ரூ.79.55 ஆக வர்த்தகமானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement