இந்தியாவின் யு.பி.ஐ சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் போன்பே, கூகுள்பே நிறுவனங்களுக்கு கடிவாளம் போட மத்திய அரசு தயாராகி வருகிறது.
எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யுபிஐ முறை, வெற்றிகரமான பணபரிவர்த்தனை அமைப்பாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2015ல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் பேமண்ட்ஸ் உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் வங்கி கணக்கு, டெபிட் கார்டு இன்றி, ஒருங்கிணைந்த செயலிகள் மூலம் பல்வேறு கட்டணம் செலுத்துதல் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த இயலுமென்பதால், இளைய தலைமுறையினரிடம் வெற்றிகரமாக சென்று சேர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த யு.பி.ஐ சந்தையில், ஒவ்வொரு மாதமும் 80 சதவீத பரிவர்த்தனைகளுடன் போன்பே, கூகுள்பே முன்னணியில் உள்ளன.
![]()
|
போன்பே, கூகுள் பே ஆகிய இரு நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் , ஆளும் பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள், பார்லி.,யில், பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகள் இருக்கும் நிலையில், இந்த இரு நிறுவனங்கள் மட்டும் 81 சதவீதம் அளவுக்கு கணக்குகளையும், 84 சதவீதம் பரிவர்த்தனை மதிப்பை கையில் வைத்துள்ளன. இது தவிர, பார்லியில் வரும் மழைக்கால கூட்டத்தொடரில், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் குறித்து .பிரச்னையை எழுப்ப உள்ளனர். போன்பே, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது. கூகுள்பே, பிரபல இணைய தேடல் நிறுவனமான கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானது. மற்றுமொரு யுபிஐ செயலியான அமேசான்பே, அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
![]()
|
யு.பி.ஐ பரிவர்த்தனைகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, யு.பி.ஐ பணபரிவர்த்தனைகளை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இந்த அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், வங்கிகள் அல்லாத பரிவர்த்தனை அமைப்புகளான கூகுள்பே, போன்பே,பேடிஎம் உள்ளிட்ட செயலிகள், மொத்த சந்தை மதிப்பில் 30 விழுக்காட்டுக்கு மேல் கைப்பற்ற கூடாதென அறிவுறுத்தியுள்ளது. வரும் ஜனவரி 2023 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரவுள்ளன.
இருப்பினும், போன்பே மற்றும் கூகுள்பே சந்தைப்பங்கின் வரம்பிற்கு இணங்க முடியாது என்பதால் காலக்கெடுவை நீட்டிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
Advertisement