கவர்னருக்கு எதிராக மதுரை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: அமைச்சர் பொன்முடி திடீர் அறிவிப்பு

Updated : ஜூலை 13, 2022 | Added : ஜூலை 12, 2022 | கருத்துகள் (141) | |
Advertisement
சென்னை: பல்கலைகழகங்களில் மாணவர்கள் இடையே, கவர்னர் அரசியலை புகுத்துகிறார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்த பொன்முடி கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இணை வேந்தர்,
கவர்னர்ஆர்என்ரவி, அமைச்சர்பொன்முடி,  காமராஜர்பல்கலைகழகம்,  GovernorRNRavi, MinisterPonmudi, MaduraiKamarajUniversity,

சென்னை: பல்கலைகழகங்களில் மாணவர்கள் இடையே, கவர்னர் அரசியலை புகுத்துகிறார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்த பொன்முடி கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இணை வேந்தர், உயர்கல்வி அமைச்சர் எங்களிடம் எந்த அறிவிப்பும் இல்லாமல் வேந்தர் அறிவிக்கிறார் என்கிறார் துணை வேந்தர். சிறப்பு விருந்தினராக யாரை போடலாம் என இணைவேந்தர், செயலரிடம் கேட்க வேண்டும். எதுவும் கேட்கவில்லை. துணை வேந்தரை கேட்டால், தனக்கு எதுவும் தெரியாது. அனைத்தும் கவர்னர் அலுவலகத்தில் இருந்து வருகிறது எனக்கூறுகிறார்.


latest tamil news
கவர்னர் அலுவலகத்தில் இருந்து இணை வேந்தர் என்ற முறையில் என்னிடம், கேட்க வேண்டும். அலுவலராவது கேட்க வேண்டும். தலைமை விருந்தினர் என போட்டு பேசுவது உண்டு. கவுரவ விருந்தினர் என யாரையும் அழைப்பது கிடையாது. டாக்டர் பட்டம் அளிப்பவர்களை மட்டும் கவுரவ விருந்தினராக அழைக்கப்படுவார்கள். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு கவுரவ விருந்தினர் என ஒருவரை அழைக்கின்றார்.

பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதன் அடிப்படையில் செயலர் அதிகாரிகள், துணைவேந்தர், கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினர். கவர்னர் அலுவலகத்தை கேட்டால், இப்படித் தான் செய்வோம் என கூறுகின்றனர். பல்கலை மாணவர்கள் இடையே அரசியலை புகுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் வருவதால், இணை வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்


latest tamil news


கவர்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. அவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவர். இந்த காரணத்தால் மத்திய ஆட்சிக்கு, கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதல்ல. மாநில அரசிற்கு, மாநில முதல்வருக்கு உடன்படுவதுதான் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்த்து பேசுவது அவரது தவறான கொள்கை. மாநில அரசு தனிக்கல்வி கொள்கை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டது தெரிந்தும், மத்திய கல்வி கொள்கை பற்றி பேசுவதற்கு யார் அந்த அதிகாரங்களை கொடுத்தார் என்பது தெரியவில்லை. கவர்னராக இருப்பதை விட, பா.ஜ.,விற்கு பிரசாரம் செய்பவராக இருந்து கொண்டுள்ளார்.

இணைவேந்தர் என்ற முறையில் எங்களிடம் யாரை சிறப்பு விருந்தினராக போட வேண்டும் என ஆலோசித்திருக்க வேண்டும். பட்டமளிப்பு விழாவில் முதலில் வேந்தர், இணைவேந்தர், சிறப்பு விருந்தினர் என போடுவார்கள். கவுரவ விருந்தினர் என யாரையும் போடமாட்டார்கள்.


latest tamil newsஆனால், கவுரவ விருந்தினர் என ஒருவரை போட்டு, மத்திய இணை அமைச்சர் முருகனை அழைத்துள்ளனர். அவர் மத்திய கல்வி அமைச்சரும் இல்லை. துணை அமைச்சர். பட்டமளிப்பு விழாவில், கவர்னருக்கு அடுத்து கவுரவ விருந்தினரை போட வேண்டிய அவசியம் இல்லை. கவர்னரின் நோக்கம் என்ன? அரசியலை, பல்கலைகழகங்களில் புகுத்த பட்டமளிப்பு விழாவை பயன்படுத்துவதால், நான் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். பட்டமளிப்பு விழாவில் அரசியல் குறித்து பேசக்கூடாது. மாணவர்களின் வளர்ச்சி குறித்து பேசுவதற்காக இருக்க வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (141)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Dindigul,இந்தியா
14-ஜூலை-202216:11:22 IST Report Abuse
Karthik இவரு வராதது ரொம்ப நல்லதே. வெட்டி வேலையிருந்த போய் பாரு.......
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
14-ஜூலை-202210:48:40 IST Report Abuse
ThiaguK நாம் புரிந்து கொள்ள வேண்டியது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முதல்வர் புறக்கணிப்பர் என்று ..மக்களின் கவெர்னர் ஆகி விடுவார் விரைவில்
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
14-ஜூலை-202207:33:35 IST Report Abuse
மிளிர்வன் அய்யா பொம்முடி.. டீம்க்கா மாணவரணி என்று ஒன்று வைத்திருக்கிறீர்களாமே? அரசியல், ஒட்டு சேகரிப்பு என்று அவர்களை திசை திருப்புகிறீர்களாமே? நமக்கு என்றால் ரத்தம்.. மற்றவருக்கு என்றால் தக்காளி சட்னியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X