பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு: சைக்கிளுக்கு மாறும் இலங்கைவாசிகள்

Updated : ஜூலை 12, 2022 | Added : ஜூலை 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கார் மற்றும் டூவீலர் வைத்துள்ளவர்கள், அதனை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட
srilanka, srilankacrisis, bycycle, fuel shortage,Sri Lankans turn to bicycles amid fuel shortage, skyrocketing prices

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கார் மற்றும் டூவீலர் வைத்துள்ளவர்கள், அதனை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.



இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்கு பல கி.மீ., தூரம் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு சில நேரங்களில் 4 அல்லது 5 நாட்கள் கூட எரிபொருள் கிடைப்பதில்லை. இலங்கை பண மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.470க்கும், டீசல் ரூ.460க்கும் விற்பனை ஆகிறது.




latest tamil news

தற்போதுள்ள சூழ்நிலையில், அவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு மக்களால் முடியவில்லை. இதனால், பெரும்பாலானோர் தங்களது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சைக்களிலில் பயணிக்க துவங்கி விட்டனர். தற்போது, வழக்கத்தை விட சைக்கிள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் கூட சைக்கிளை கொண்டு வருகின்றனர். அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர்.



latest tamil news

இது தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் லாக்லின் என்பவர் கூறுகையில், தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக சைக்கிளை பயன்படுத்த துவங்கிவிட்டோம். பெட்ரோல் வாங்க முடியவில்லை. வரிசையில் நின்று பெட்ரோல் வாங்குவதற்கு போதிய நேரமும் இல்லை. வரிசையில் நின்றாலும் பெட்ரோல் கிடைக்குமா என்பதற்கு உறுதியும் இல்லை. இதனால், சைக்கிளில் செல்வது தான் சரியாக இருக்கும். பொருளாதார சிக்கல் துவங்கியதும், பெரும்பாலானோர், தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்து மற்றும் சைக்கிளை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

13-ஜூலை-202207:04:13 IST Report Abuse
kulandai kannan சீமான் இப்போதெல்லாம் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசுவதில்லையே, ஏன்??
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
12-ஜூலை-202218:52:15 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஒரு பக்கம் கேட்க துக்கமாக இருந்தாலும் ... இயற்கை சூழலுக்கு நல்லது சைக்கிள் சவாரி..ஊதாரி மடையன் இலவசங்கள் தாராளமாக தரும் ஊரில் வாழ்வதால் எதுக்கும் என்னோட சைக்கிளுக்கு ரிப்பேர் செஞ்சு வைத்துக்கொள்கிறேன்.. சமயத்தில் கைகொடுக்கும் ...
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
12-ஜூலை-202218:24:59 IST Report Abuse
Paramasivam இலங்கை பொருளாதாரம் முன்னேற இதுவும் ஒரு வழிதான். ஒவ்வொரு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது ஒரு பெரிய அந்நிய செலாவணியை விழுங்கும் பிரச்சனைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X