சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின், இரு டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார்.
பிரார்த்தனை
இதனிடையே ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என பல தலைவர்கள் கூறியுள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு கோவிட் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டி கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.