ஆழ்கடலில் காணப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் மீன் வடிவிலான சிறிய ரோபோவை, சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள், உருவாக்கியுள்ள தொடுவதற்கு மிகவும் மென்மையான இந்த ரோபோ மீன், 1.3 செ.மீ.,நீளம் கொண்டவை. இவை ஏற்கனவே ஆழமற்ற நீரில் மைக்ரோ பிளாஸ்டிக்கை உறிஞ்சும் திறன் கொண்டவையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழு உறுப்பினர்களில் ஒருவரான வாங் யுயான் கூறுகையில்,
ஆழமான பெருங்கடலில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சவும், ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள மாசு குறித்த உண்மையான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்பதே குழுவின் நோக்கமாக உள்ளது.
அத்தகைய இலகுரக சிறிய ரோபோவை நாங்கள் உருவாக்கினோம். இது பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, அபாயகரமான நேரங்களில், ரோபோவை மனித உடலுக்குள் செலுத்தி சில நோய்களை குணப்படுத்த கூட பயன்படுத்தலாம்.
![]()
|
ஒருவேளை, எதிர்பாராத விதமாக வேறு மீன், ரோபோ மீனை முழுங்கிவிட்டால் கூட, முழுவதும் பாலியூரிதீன் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால், செரிமானம்
ஆவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
![]()
|
மீன் கழிவுகளை உறிஞ்சி, சேதமடைந்தாலும் தன்னைத்தானே மீட்டெடுக்கும் திறன் கொண்ட இந்த ரோபோ, மற்ற ரோபோக்களை விட வினாடிக்கு 2.76 நீளம் வரை நீந்தும் திறன் கொண்டது. நாங்கள் பெரும்பாலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் சேகரிப்பில் இதனை பயன்படுத்துகிறோம். இது ஒரு மாதிரி ரோபோ தான். இதனை மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.