தேசிய சின்னத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Added : ஜூலை 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : புதிய பார்லி., கட்டடத்தின் உச்சியில் வைத்துள்ள தேசிய சின்னத்தில், சிங்கம் கர்ஜிப்பது போல மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.அசோக
தேசிய சின்னம், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் சர்ச்சை, National Symbol, PM Narendra Modi, Opposition Controversy,

புதுடில்லி : புதிய பார்லி., கட்டடத்தின் உச்சியில் வைத்துள்ள தேசிய சின்னத்தில், சிங்கம் கர்ஜிப்பது போல மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.அசோக சக்கர பீடத்தில் நான்கு சிங்கங்கள் நிற்கும் இந்த தேசிய சின்னம் குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.இது பற்றி லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'புதிய பார்லி., உச்சியில் வைத்துள்ள அசோக சக்கர பீடத்தில் இருக்கும் கிர் சிங்கத்தின் முகம், நம் தேசிய சின்னமாக உங்களுக்கு தோன்றுகிறதா என பாருங்கள். தயவு செய்து ஆராய்ந்து, தேவைப்பட்டால் மாற்றம் செய்யுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.திரிணமுல் காங்., ராஜ்ய சபா உறுப்பினர் ஜவஹர் சிர்கார், தேசிய சின்னத்தின் இரு மாறுபட்ட படங்களை 'டுவிட்டரில்' வெளியிட்டு கூறுகையில், 'அசல் தேசிய சின்னத்தில் உள்ள சிங்கத்தை பாருங்கள். அது அமைதியாக, நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறது. மோடி வைத்துள்ள தேசிய சின்னத்தில் சிங்கம் கர்ஜிப்பது போல இருக்கிறது. இது தேவையற்றது' என்றார்.''தேசிய சின்னத்தில் சிங்கங்களை கோபமாக காட்டுவதுதான் மோடியின் புதிய இந்தியா,'' என, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
13-ஜூலை-202213:20:18 IST Report Abuse
jayvee ஒரு தேசிய சின்னதில் மாற்றம் செய்யும் பொது, மத்திய அரசு, பாராளுமன்றத்தில் இதற்கான ஒப்பாதலை பெற்றிருக்கவேண்டும்.. குறைந்தபட்சம், அரசியல் சாசன விதிப்படி நடந்திருக்கவேண்டும்.
Rate this:
venkat - CHENNAI,இந்தியா
14-ஜூலை-202220:11:02 IST Report Abuse
venkatஎது சிங்கத்திற்கு பல் வைக்கலாமா என்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் .. அண்ணா ...உங்களுக்கு வேற லெவல் சிந்தனை .....
Rate this:
Cancel
venkat - CHENNAI,இந்தியா
13-ஜூலை-202209:03:15 IST Report Abuse
venkat பல் இல்லாத சிங்கத்தை வைத்து இவ்வளவு வருடம் இந்தியாவை ஆட்சி செய்தவர்களுக்கு இப்போ பல் உடன் கர்ஜிக்கும் சிங்கத்தை பார்த்தால் பயமாக தான் இருக்கும், அவ்வளவு ஊழல் செய்து உள்ளார்கள்.. அவ்வளவு கொள்ளை அடித்து உள்ளார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X