ஒகேனக்கலில் வெள்ளப் பெருக்கு1.10 லட்சம் கன அடி நீர்வரத்து

Added : ஜூலை 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஒகேனக்கல், : ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 1.10 லட்சம் கன அடியாக அதிகரித்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.இதனால், கர்நாடகவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து
ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு, தென்மேற்கு பருவமழை, மேட்டூர் அணை, hogenakkal flood, Southwest Monsoon, Mettur Dam,


ஒகேனக்கல், : ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 1.10 லட்சம் கன அடியாக அதிகரித்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால், கர்நாடகவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை பாதுகாப்பு கருதி காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று, கபினியிலிருந்து வினாடிக்கு, 35 ஆயிரத்து, 333 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 71 ஆயிரத்து, 90 கன அடி என, இரண்டு அணைகளிலிருந்தும் மொத்தம், 1 லட்சத்து, 6,423 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று காலை, 10:00 மணிக்கு, 1 லட்சத்து, 5,000 கன அடியாகவும், மாலை, 5:00 மணிக்கு, 1 லட்சத்து, 10 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால், ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார், பி.டி.ஓ., வடிவேல் தலைமையில் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், ஆலாம்பாடி, ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் தண்டோர மூலம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.மடம் மூன்று ரோடு பகுதியில், சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணை மீண்டும், 100 அடியை தாண்டி நீர்மட்டம் உயர்ந்தது. அணை கட்டி, 88 ஆண்டுகளில் நீர்மட்டம், 68வது முறையாக, 100 அடியை கடந்தது.நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம், 102.10 அடி, நீர் இருப்பு, 67.59 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு, 90 ஆயிரத்து, 873 கனஅடியாக எகிறியது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.subramanian - madurai,இந்தியா
13-ஜூலை-202215:28:28 IST Report Abuse
v.subramanian கர்நாடகாவில் அவர்களின் எல்லா அணைகளும் முட்டி நிரம்பியவுடன் திடிரென்று எல்லா தண்ணீரை திறந்து விடுவார்கள் அவர்களுக்கு தமிழ்நாடு ஒரு dustbin நாம் எல்லா தண்ணீரையும் வாங்கிக்கொள்ள வேண்டும் அணைகளுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கும்போதே படிப்படியா திரந்து விட்டால் என்ன. நிறைய தண்ணீர் வரத்தினால் தமிழ்நாட்டில் எதாவது சேதம் ஏற்பட்டால் கர்நாடக அரசிடம் நஷ்டஈடு கேட்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X