மனை பட்டா மாறுதல் கோரிய 1,464 மனுக்கள் தேக்கம்: விரைந்து முடிக்க விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்பு

Updated : ஜூலை 13, 2022 | Added : ஜூலை 13, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
காஞ்சிபுரம்: பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்ட 1,464 மனுக்கள், பல மாதங்களாக தீர்வு காணப்படாமல் தேக்கமடைந்துள்ளன. மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், அதிகளவிலான மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆய்வு பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்து, பட்டாக்களை வழங்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்ட 1,464 மனுக்கள், பல மாதங்களாக தீர்வு காணப்படாமல் தேக்கமடைந்துள்ளன. மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், அதிகளவிலான மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆய்வு பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்து, பட்டாக்களை வழங்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.



latest tamil news




காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய வருவாய் கோட்டங்கள் உள்ளன.இவற்றில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 11 தாலுகா அலுவலகங்களில், 30க்கும் மேற்பட்ட குறுவட்டங்கள் உள்ளன.


'கட்டிங்'


குறு வட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள், வீட்டு மனை, காலி மனைக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, குறு வட்ட நில அளவையாளர், கிராமத்தில் ஆய்வு செய்து, நிலம் அளந்தபின் பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு செய்து வந்தனர். ஒரு மனுதாரர் சர்வே எண் என, அழைக்கப்படும் முழு புல எண்ணுடன் பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்தால், 15 நாட்களில் மாற்றி தர வேண்டும்.

அதேபோல், பட்டா உட்பிரிவு மாற்றம் செய்து கொடுப்பதற்கு, விண்ணப்பதாரர் விண்ணப்பித்த, 30 நாட்களில் செய்து கொடுக்க வேண்டும் என, வருவாய் துறை வழிகாட்டியில் உள்ளது.இதை பெரும்பாலான குறு வட்ட நில அளவையர் கடை பிடிப்பதில்லை. 'கட்டிங்' வந்து சேரும் வரையில் பட்டா மாற்றம் மற்றும் பட்டா உட்பிரிவு மாற்றம் செய்ய கோப்புகள் தயாரிப்பதில்லை என, விண்ணப்பதாரர்கள் இடையே புகார் எழுந்து உள்ளது.


நிலுவை


அந்த வகையில், தமிழகம் முழுதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் 2021 - 22 மார்ச் வரையில் 2.33 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. இதில் 92 ஆயிரத்து 903 மனுக்கள் நிலுவையில் உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 952 மனுக்கள்; செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,464 மனுக்கள் என, மொத்தம் 2,416 மனுக்கள், பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்து தரப்படாமல் நிலுவையில் உள்ளன.


latest tamil news





சிறப்பு பயிற்சி


இதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில் மே 12 முதல் 19ம் தேதி வரையில், இணைய தள உட்பிரிவு பட்டா மாறுதல் மற்றும் நில அளவை தொடர்புடைய பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆகையால் நடப்பு ஆண்டில் விண்ணப்பித்த அனைவருக்கும், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு உள்ளிட்ட பணிகளை, வருவாய் துறையினர் விரைந்து முடித்து கொடுப்பரா என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
ஓராண்டில் 60 பட்டா மாற்றத்திற்கு மேல் வரும் கிராமங்களில், நில அளவையர் பட்டா மாற்றம் செய்து கொடுக்கலாம்.அதே ஆண்டில் 60 பட்டாக்களுக்கு குறைவாக வரும் கிராமங்களில், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களே பட்டா மாற்றம் செய்து கொடுக்கலாம் என, வருவாய் துறை வழிகாட்டியில் மாற்றம் வந்துள்ளது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.பட்டா வழங்கும் பணியும் துவக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு நிலுவையின்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
13-ஜூலை-202217:32:54 IST Report Abuse
R S BALA கடவுளே வந்தாலும் கட்டிங் இல்லாமல் இது போன்ற துறைகளில் வேலைகள் நடவாது..
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
13-ஜூலை-202213:22:16 IST Report Abuse
jayvee பல இடங்களில் சர்வேயர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினாலும், லஞ்சம் வாங்குவது நிற்கவில்லை.. குறைந்தபட்சம் பத்தாயிரம் இல்லாமல் பட்ட மாறுதல் நடப்பதில்லை .. நகரங்களில் இன்னும் அதிகம் ..
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-ஜூலை-202211:53:36 IST Report Abuse
raja தேனை ஊத்துண்ண புறங்கை நக்கிட்டு தெம்பா வேலையை விரைவா செய்வானுவோ....கட்டுமரம் சொல்லி இருக்கே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X