'பொம்மைகளுக்கு வெற்று வசனம் எதற்கு': பழனிசாமியை பதம் பார்க்கும் திமுக

Updated : ஜூலை 13, 2022 | Added : ஜூலை 13, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
சென்னை: ''பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டில்லி தான் நேரடி எஜமானர்கள். டில்லியில் கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன; இவர்களுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?'' என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.சென்னை வானகரத்தில் கடந்த 11ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர்
எடப்பாடி பழனிசாமி, ஆர்எஸ்பாரதி, அதிமுக, திமுக, edapadi palanisamy, palanisamy,  admk,  dmk, rsbarathi, பழனிசாமி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டில்லி தான் நேரடி எஜமானர்கள். டில்லியில் கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன; இவர்களுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?'' என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.

சென்னை வானகரத்தில் கடந்த 11ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி, '' என்னை இன்னும் பழைய பழனிசாமி என நினைத்தீர்களா? நடக்காது ஸ்டாலின் அவர்களே'' என பேசியிருந்தார்.


latest tamil news


இதற்கு பதிலடி கொடுத்து ஆர்எஸ் பாரதி வெளியிட்ட அறிக்கை: அதிமுக தற்காலிக பொது செயலாளர் பழனிசாமி தேவையில்லாமல் திமுக.,வை சுரண்டி பார்த்திருக்கிறார். அதிமுக எதிரும், புதிருமாக கோஷ்டி மோதல்களை நடத்தி கொண்டு திமுக மீது பாய்வது திசை திருப்புகிற வேலை. அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து திமுக.,வை எதிர்த்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் கட்சி அதிமுக. நீதிக்கு எதிரானது அநீதி. நியாயத்திற்கு எதிரானது அநியாயம் அதுபோல திமுக.,வுக்கு எதிரான இயக்கம் அதிமுக. அதிமுகவை தொடங்கியபோது அதற்கு டில்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள்; இப்போது பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டில்லி தான் நேரடி எஜமானர்கள். டில்லியில் கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன; இவர்களுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?


latest tamil news



பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி என நினைச்சுட்டீங்களா? நடக்காது மோடி அவர்களே எனப்பேசி பாருங்கள். அமலாக்கத்துறை சிபிஐ பழிவாங்குகிறது என குரல் எழுப்பியது உண்டா? பொதுக்குழுவில் திமுகவை நோக்கி பொங்கிய பழனிசாமி மத்திய பாஜ அரசு பழிவாங்குகிறது எனு முணுமுணுக்கும் தைரியம் உண்டா?துணிவிருந்தால், நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய ரூ.500 கோடி வருமானம பற்றியும், அவர்கள் இருவருக்கும், உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி. இவ்வாறு ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13-ஜூலை-202221:16:20 IST Report Abuse
sankaranarayanan பல கோடி ஊழலுக்கு துணைபோன அணிலுக்கு பரிந்து பேசும் கட்சியை சேர்ந்தவர் இவர். டில்லியில் கயிறு இழுக்கப் படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன என்று கூறும் இவருக்கு தெரியாதா திராவிட கட்சியில் உள்ளவர்கள் ஏற்ப அவர்களால் இழுக்கப்படும் கயிற்றில் சிக்கி சீரழைவை நோக்கி போயிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்று. மக்களே சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
13-ஜூலை-202220:44:30 IST Report Abuse
சோலை பார்த்தி டிக்கெட் எடுக்க வக்கு இல்லாத குடும்பத்துக்கு வக்காலத்து பேசுர நீ....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-ஜூலை-202220:28:32 IST Report Abuse
Vena Suna இருட்டுகளுக்கு இருட்டு , வெளிச்சாங்களுக்கு வெளிச்சம் பழநிஸ்வாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X