'இளைஞர்கள் வேலை கொடுப்பவராக மாற வேண்டும் என்பதே பிரதமர் கனவு'

Updated : ஜூலை 14, 2022 | Added : ஜூலை 14, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
மதுரை : "இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு," என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்தது. இந்திய அறிவியல் நிறுவன (ஐ.ஐ.எஸ்.சி.,) முன்னாள் இயக்குனர் பலராம் பட்டமளிப்பு உரையாற்றினார்.மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது: தமிழர்களின் மனித வளம் ஆற்றல் மிக்கது.
L Murugan, BJP, Modi, PM Modi,Murugan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : "இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு," என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.

மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்தது. இந்திய அறிவியல் நிறுவன (ஐ.ஐ.எஸ்.சி.,) முன்னாள் இயக்குனர் பலராம் பட்டமளிப்பு உரையாற்றினார்.

மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது: தமிழர்களின் மனித வளம் ஆற்றல் மிக்கது. பல்வேறு துறைகளில் தமிழர்கள் தனித்த அடையாளமாக விளங்குகின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். ஐ.நா.,வில் தமிழில் பேசிய பின் தான் அவரது உரையை துவக்கினார். 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாட்டத்தை முன்னிட்டு வாரணாசி பல்கலையில் பாரதியார் இருக்கை ஏற்படுத்தி பெருமை சேர்த்தார்.


latest tamil news



இன்றைய இளைஞர்கள் இந்தியாவை உலக அளவில் எடுத்துச்செல்ல வேண்டும். அவர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு. உலகில் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும் நம் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கிறது. திறமை வாய்ந்த இளைஞர்கள் உலக அளவில் தங்கள் திறமையை கொண்டுசெல்ல வழி ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டங்கள் இங்கு உள்ளன.

'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. 2047ம் ஆண்டில் முன்னேறிய நாடுகளில் நாம் முன்னிலையில் வகிப்போம். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழி வழிகற்றலை ஊக்குவிக்கும், என்றார்.


latest tamil news



துணைவேந்தர் குமார் வரவேற்றார். சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, வாசுதேவன், நாகரத்தினம், தங்கராஜ், பதிவாளர் சிவக்குமார், தேர்வாணையர் தர்மராஜ் பங்கேற்றனர். முனைவர், இளங்கலை, முதுகலை என 1,33,091 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-202217:09:30 IST Report Abuse
ஆரூர் ரங் அரசே எல்லோருக்கும் வேலை கொடுப்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை . தொழில் முனைவோர்களை அதிகமாக உருவாக்கினால்தான் அவர்களும் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முடியும். இப்படிப்பட்ட சிந்தனை முன்பு இருந்த🤫 ஆட்சியாளர்களுக்கு வந்ததேயில்லை.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
14-ஜூலை-202217:04:52 IST Report Abuse
Samathuvan எட்டு வருடமாக ஒரே கனவு மட்டும்தான் வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
14-ஜூலை-202214:53:41 IST Report Abuse
Senthil Kumar என்ன கம்பி கட்டுரா கதை சொல்லுறானுக பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X