மதுரையில் ஆக்கிரமிப்புகளை கண்டறிவதில் சிக்கல்!

Updated : ஜூலை 14, 2022 | Added : ஜூலை 14, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சி விரிவாக்க வார்டுகளில் இதுவரை நில அளவை செய்யாததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மதுரை நகரின் பரப்பளவு 148.62 சதுர கிலோ மீட்டர். அதில் விரிவாக்க பகுதிகளான 28 வார்டுகளில் பரப்பளவு 98 சதுர மீட்டர். இந்த 98 சதுர மீட்டரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் குறித்து நகர அளவை செய்யவில்லை. மாநகராட்சி பகுதியை கடந்து

மதுரை: மதுரை மாநகராட்சி விரிவாக்க வார்டுகளில் இதுவரை நில அளவை செய்யாததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.latest tamil news
மதுரை நகரின் பரப்பளவு 148.62 சதுர கிலோ மீட்டர். அதில் விரிவாக்க பகுதிகளான 28 வார்டுகளில் பரப்பளவு 98 சதுர மீட்டர். இந்த 98 சதுர மீட்டரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் குறித்து நகர அளவை செய்யவில்லை. மாநகராட்சி பகுதியை கடந்து செல்லும் கண்மாய், நீர்நிலைகள், தெருக்கள் குறித்தும் தெளிவான தகவல் இல்லை.

இதனால் விரிவாக்க பகுதிகளில் உள்ள மாநகராட்சி, அரசு புறம்போக்கு இடங்கள்,தெருக்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். பல தெருக்களில் ரோட்டில் பாதியை இழுத்து சிமென்ட் மேடை போல் கட்டி வாகனம் நிறுத்தியுள்ளனர். முட்டு சந்துகளில் வீடு கட்டியவர்கள் முன்பகுதி தெருவில் கான்கிரீட் தளம் அமைத்து வராண்டா கட்டியுள்ளனர்.

அனுப்பானடி நடுத்தெரு, திருப்பாலை, ஆனையூர், புதுார், கூடல்நகர் உட்பட பல வார்டு தெருக்கள் பல ஆண்டுகளாகவே ஆக்கிரமிப்பில் உள்ளன. தற்போது புதிதாக ரோடு அமைக்கும் பணி நடக்கும் நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சமீபத்தில் வடக்கு மண்டலத்தில் சில மாநகராட்சி இடங்களை அதிகாரிகள் மீட்டனர். இதே போல் பிற மண்டலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news
ஓய்வு பெற்ற நில அளவை துணை ஆய்வாளர் இருளாண்டி கூறியதாவது:
நில அளவை செய்யப்படாத விரிவாக்க பகுதியில் மனை, நில உரிமையாளர்களின் சிலருக்கு தற்போதைய வருவாய் சர்வேபடி பட்டா வழங்கவில்லை. இதனால் அவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டம் பெறுவதில் சிக்கலை சந்திக்கிறார்கள்.
நில அளவை செய்து ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி இடங்களை அதிகாரிகள் மீட்க வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மதுரையில் சில கண்மாய்களை துார்வாரி சென்னை புழல், செம்பரம்பாக்கம் போல் ஏரியாக்க வேண்டும். இது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
14-ஜூலை-202217:02:54 IST Report Abuse
Manguni ஈகிள் பார்க் என்ற பெயரில் ஒரு அம்பது சதுர அடியை முன்புறம் ஈகிள் அமைக்க பை பாஸ் ரோடு சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமித்துள்ளனர் ஆளுங்கட்சியினர். அதை தட்டி கேட்க வக்கில்லை.. ஆனால் ஏழை காய் வியாபாரிகளை சர்வீஸ் ரோடு விட்டு துரத்துவதில் மும்முரம் அரசு.
Rate this:
Cancel
venkateswaran TL - CHENNAI,இந்தியா
14-ஜூலை-202216:02:38 IST Report Abuse
venkateswaran TL சோழவந்தான் திருவேடகம் மேலகால் துவரிமான் கோச்சடை பகுதியில் வைகை ஆறு முழுவதும் ஆக்ரமிப்பு மற்றும் புதர் மண்டி கிடக்கிறது. இதற்க்கு விடிவு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை . மக்கள் சொரணை அற்று போய் ரொம்ப நாளாகி விட்டது
Rate this:
Cancel
14-ஜூலை-202214:40:36 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) ஆக்கிரமிப்புகள் இல்லாவிட்டால் திராவிடம் இல்லை என்பதே உண்மை. ஆக்கிரமித்திருப்பவர்கள் 99 விழுக்காடு அரசியல்வியாதிகளே. இவர்கள் கட்சிகள் ஆட்சியிலிருக்கும்போது எப்படி ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள்? இனி நீதிமன்றங்களை தலைமை செயலகத்தையும் ஆக்கிரமித்தால்தான் இவர்களுக்கு புத்தி வரும் போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X