கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; 'ரோப்' துண்டிப்பால் ஆற்றில் வீணாக செல்லும் நீர்

Updated : ஜூலை 14, 2022 | Added : ஜூலை 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ஓசூர் : ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தும், மதகின் 'ரோப்' துண்டிக்கப்பட்டுள்ளதால், நீரை சேமிக்க முடியாமல் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணையின் முதல் மதகை திறப்பதற்கு பயன்படும் 'ஷட்டர் ரோப்' துண்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், மேலும் சில மதகு ஷட்டர்களின் ரோப்கள் மோசமான நிலையில்
கெலவரப்பள்ளி, அணை, நீர்வரத்து, அதிகரிப்பு, 'ரோப்',

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஓசூர் : ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தும், மதகின் 'ரோப்' துண்டிக்கப்பட்டுள்ளதால், நீரை சேமிக்க முடியாமல் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணையின் முதல் மதகை திறப்பதற்கு பயன்படும் 'ஷட்டர் ரோப்' துண்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், மேலும் சில மதகு ஷட்டர்களின் ரோப்கள் மோசமான நிலையில் உள்ளன. அதனால், அணை நீர்மட்டத்தை, 24 அடியாக குறைத்து, பராமரிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், ரோப் துண்டிப்பு மற்றும் பிற ஷட்டர்களின் ரோப் பழுதால், அணையில் நீரை சேமிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் கடந்த 9ம் தேதி முதல், அணைக்கு நீர்வரத்தை விட, கூடுதல் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.


latest tamil news
நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு, 518 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 722 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,060 கன அடிநீர் திறந்து விடப்பட்டது. நுங்கும், நுரையுமாக தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது.கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள நிலையில், ரோப் துண்டிப்பால், அந்த நீரை அணையில் சேமிக்க முடியாமல், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நீரை ஏரிகளில் திருப்பி விட்டிருந்தால், சூளகிரி, உத்தனப்பள்ளி சுற்று வட்டாரத்திலுள்ள பல ஏரிகள் நிரம்பிஇருக்கும். ஆனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கும் பயன்படாமல், விவசாயிகளுக்கும் பயன்படாமல், வீணாக தண்ணீர் ஆற்றில் செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkateswaran TL - CHENNAI,இந்தியா
14-ஜூலை-202212:25:47 IST Report Abuse
venkateswaran TL பாலாஜி சொல்றத புரிஞ்சிக்கோ ஷட்டர் பழுது காரணமா ஷட்டர் மூட முடியாத காரணத்தால் தண்ணீர் ஆற்றில் ஓடி கடலில் கலக்கும், அணையில் சேமித்தால் வேண்டிய பொழுது திறந்து தேவையான வழியில் தண்ணீர் திருப்பி விடலாம். சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேணும். இதெல்லாம் தினமலரை தவிர எந்த பத்திரிக்கையும் எழுதறதில்லை ம்ம்ம்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
14-ஜூலை-202210:50:04 IST Report Abuse
Balaji ஆற்றில் நீர் பாய்வது இயற்கை.. அதற்க்கு மாறாக இருக்கிறது தலைப்பு.. ஆற்றி நீர் பாய்ந்தால் தான் ஆறு ஓடும் அனைத்துப் பகுதிகளுக்கும் செழிப்பு ஏற்படும். மேலும் நிலத்தடிநீர் பரவலாக முன்னேறும்.. வீணாக குளத்தில் அணையில் நின்று ஆவியாகும் நீர் இப்போது தன இயற்க்கை பாதையை ஈரப்படுத்தி செல்கிறது. அது நல்லது..
Rate this:
Cancel
14-ஜூலை-202210:46:26 IST Report Abuse
Gopalakrishnan S கடந்த அறுபது வருஷங்களாக எந்த ஆணையும் திராவிட மாடல் விடியாத ஆட்சிகள் கட்டவில்லை. இருக்கும் அணைகளை பராமரிக்கவும் இல்லை. கர்நாடகா காவிரி ஆற்றில் அணை கட்ட அனுமதியும் தந்தாகி விட்டது. ஆண்டவனாக பார்த்து கொடுக்கும் தண்ணீரை சமுத்திரம் அனுப்பி வைப்போம். தமிழ் வாழ்க !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X