சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: எதிர்க்கட்சி துணைத்தலைவராக வேறு யாரையாவது நியமித்தால், அதனை ஏற்கக்கூடாது என பன்னீர்செல்வம், தனது உதவியாளர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. கடிதம் குறித்து விறுப்பு வெறுப்பு இன்றி, நியாயமான முறையில் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. அதிமுக கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.