‛‛மிஸ்டர் ஹிட்லர்! இது ஜெர்மனி அல்ல'': கமல்ஹாசன் கண்டனம்

Updated : ஜூலை 15, 2022 | Added : ஜூலை 14, 2022 | கருத்துகள் (115) | |
Advertisement
சென்னை: பார்லிமென்டில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‛மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல' என விமர்சித்துள்ளார்.கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல. மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களா?
Kamalhaasan, MNM, Hitler, Parliament, Words Ban, Kamal, கமல்ஹாசன், மநீம, மக்கள் நீதி மய்யம், ஹிட்லர், பார்லிமென்ட், வார்த்தைகள், தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பார்லிமென்டில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‛மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல' என விமர்சித்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல. மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களா? பார்லி.,யின் இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, லோக்சபா செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகளை எம்.பி.,க்கள் பயன்படுத்தினால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? திருவள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு ‛இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்ல. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.ANNADURAI - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202212:11:31 IST Report Abuse
S.ANNADURAI ...
Rate this:
Cancel
Raj Kamal - Thiruvallur,இந்தியா
20-ஜூலை-202214:35:16 IST Report Abuse
Raj Kamal இந்த ஆட்சி போய் விட்டால் இவர்கள் வரும் ஆட்சியை பாராட்டி கொண்டே இருப்பார்களா? அப்போது இதை பிஜேபி கடைபிடிப்பார்களா? என்ன ஒரு கோமாளித்தனம்?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19-ஜூலை-202213:28:15 IST Report Abuse
Sridhar போடாங்... சுத்தமாவே மழுங்கிடுச்சா? ஒரு விசயத்தை சரியா புரிஞ்சுக்க மூளை இல்லை. ஆனா, ஆக்ரோசமா சினிமா பாணியில அறிக்க விடரத்துக்கு மட்டும் வந்துடுவீங்களாடா? போங்கடா... போயி படிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X