காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க ரூ.1 கோடி வழங்க தயார்: அண்ணாமலை

Updated : ஜூலை 15, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை-'மறைந்த முதல்வர் காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவரது அறிக்கை:பல தலைவர்களின் நினைவிடங்கள், சென்னை மெரினா கடற்கரையில் இரவிலும் ஜொலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், ஒப்பற்ற தலைவர் காமராஜரின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'மறைந்த முதல்வர் காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



latest tamil news



அவரது அறிக்கை:பல தலைவர்களின் நினைவிடங்கள், சென்னை மெரினா கடற்கரையில் இரவிலும் ஜொலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், ஒப்பற்ற தலைவர் காமராஜரின் நினைவிடம் உட்பட, காந்தியை பின்பற்றிய தலைவர்களின் நினைவிடங்கள் கிண்டியில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.காமராஜர் நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி, மக்களை கவரும் வண்ணம் அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன்.

இதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்.நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் பா.ஜ.,வுக்கு அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, முக்கியமான சுற்றுலா தலமாக மாற்றுவோம் என, உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.


latest tamil news


காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டியை பா.ஜ., கல்வியாளர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறக் கூடிய முதல் மாணவருக்கு, 1 லட்சம்; இரண்டாம் பரிசு, 50 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம்; 117 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.காமராஜரின் பிறந்த நாளில், பா.ஜ., சுதந்திர தின அமிர்த பெருவிழா நிறைவு நிகழ்ச்சிகளை துவங்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (16)

15-ஜூலை-202216:36:48 IST Report Abuse
குமரன் ஒரு தன்னலமற்ற மகத்தான தலைவரை யார் வேண்டுமானாலும் அவரது மாண்பை சொல்லலும் ஏனெனில் அவர் அனைவருக்குமானவர் ஒரு ஜாதி ஒரு மதம் என்று அந்த வட்டத்துக்குள் அடைத்து விடாதீர்கள் காமராஜரை ஏளனம் செய்து தேர்தலில் தோல்வியுறச்செய்த கட்சியுடன் கூட்டணியே வைத்துள்ளார்கள், படத்துக்கு மாலையிட்டால் குற்றமா?
Rate this:
Cancel
Bala - Bavani,இந்தியா
15-ஜூலை-202212:29:05 IST Report Abuse
Bala காமராஜருக்கு ...கும் என்ன சம்பந்தம்
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
15-ஜூலை-202211:56:41 IST Report Abuse
Sidhaarth பிஜேபிக்கும் காமராஜருக்கும் என்ன சம்மந்தம்? டெல்லியில் காமராஜர் இருந்தபோது அவரது வீட்டை கொளுத்தியவர்கள் யார்?
Rate this:
jayvee - chennai,இந்தியா
15-ஜூலை-202215:17:28 IST Report Abuse
jayveeகாங்கிரஸ்காரர்கள் .. இதுகூட தெரியாத.. தன்னை (இந்திராவை) பிரதமராக ஆக்காமல் சாஸ்திரியை பிரதமராக ஆக்கியத்திற்கு இந்திரா அளித்த பரிசு அது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X