நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்

Updated : ஜூலை 15, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ‛மூடு பனி' படத்தில் இரவு வேளையில் கிட்டாரை வைத்துக் கொண்டு அவர் பாடும் "என் இனிய பொன்
Pratappothen, RIPPratappothen,

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ‛மூடு பனி' படத்தில் இரவு வேளையில் கிட்டாரை வைத்துக் கொண்டு அவர் பாடும் "என் இனிய பொன் நிலாவே..." பாடல் தான். இந்த படத்தில் சைக்கோ தனமான வேடத்தில் அவர் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‛‛அழியாத கோலங்கள், மூடுபனி, ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், பூஜை'' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ‛‛மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, சீவலப்பேரி பாண்டி'' உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். ஓரிரு படங்களை தயாரித்தும் உள்ளார். ஹீரோ, வில்லன், காமெடி என நடிப்பில் பன்முக பரிமாணத்தை காட்டியவர் பிரதாப் போத்தன்.


latest tamil news1985ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது 'மீண்டும் ஒரு காதல் கதை" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர், சைமா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் பிரதாப்.

பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அல்லது நாளை காலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (27)

15-ஜூலை-202218:47:28 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஆழ்ந்த வருத்தங்கள் ! சிறந்த நடிகர். அலட்டிக் கொள்ளாமலும், பந்தா எதுவும் இல்லாமலும் நடிப்பவர். ஒரு படத்தில் தனுஷுக்கு பெண் பார்க்க போன இடத்தில் ஹாஷ்யமாக நடித்திருப்பார். ரசித்துப் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஜீன்ஸ் பேண்டை அறிமுகபடுத்தியவரும் இவர் தான். இதற்கு பிறகு தான் பெல் பாட்டன்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
Rate this:
Cancel
15-ஜூலை-202218:10:13 IST Report Abuse
ஆரூர் ரங் தேசீய. விருது பெற்ற ஒரே ஆங்கிலோ இந்தியர். 😪பேரிழப்பு.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜூலை-202217:06:45 IST Report Abuse
Natarajan Ramanathan அவர் கடைசியாக நடித்த கமலி from நடுக் காவேரி படத்தை சொல்லியிருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X