காமராஜர் பிறந்த நாள்: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

Updated : ஜூலை 15, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த நாள் '' கல்வி வளர்ச்சி தினம் ' ஆக கடைபிடிக்கப்படுகிறது. காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட அறிக்கை காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில்
காமராஜர் பிறந்த நாள்,  பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், Kamaraj birthday, PM Modi, CM Stalin, முக ஸ்டாலின், அதிமுக, திமுக, எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி, பழனிசாமி, பன்னீர்செல்வம், கமல், கமல்ஹாசன், தலைவர்கள்,நரேந்திர மோடி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த நாள் '' கல்வி வளர்ச்சி தினம் ' ஆக கடைபிடிக்கப்படுகிறது. காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட அறிக்கை


latest tamil newsகாமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் எனக்கூறியுள்ளார். ஆங்கிலத்திலும் இதனை அவர் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்


latest tamil news


காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சிநாள் என கருணாநிதி அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி


latest tamil newsகல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர், பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்


கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திநகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
15-ஜூலை-202217:58:49 IST Report Abuse
சீனி வாழ்க கல்வித்தந்தை.. வாழ்க எம்மான்.. வாழ்க பெருந்தலைவர்.. வாழ்க அவர் எளிமை.. வாழ்க அவர் தந்த சேவை..
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
15-ஜூலை-202217:00:48 IST Report Abuse
Barakat Ali தமிழகம் இன்று சில விஷயங்களில் மற்ற மாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்றால் அதற்கு காரணம் முடை நாற்றமெடுக்கும் திராவிஷ மாடல் அல்ல ..... இதோ இந்த படிக்காத மேதைதான் .....
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
15-ஜூலை-202220:33:24 IST Report Abuse
Dhurveshதமிழகம் ""மற்ற மாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்றால்"" அவர் கொடு போட்டார் ஆனால் ரோடு போட்டது கழகங்கள் தான் ,...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
15-ஜூலை-202216:58:53 IST Report Abuse
Barakat Ali சம்பாதித்ததை சிங்கப்பூரில் பதுக்கியுள்ளார் என்று சொன்னவர்கள் திமுகவினர் ........ அக்கட்சியின் அடிமைகளுக்கு இவரைப் புகழவும் தகுதி இல்லை ......... ஓடிப்போகட்டும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X