இந்தியாவிற்கு தடையில்  இருந்து விலக்கு: அமெரிக்க  பார்லி.,யில் தீர்மானம்
இந்தியாவிற்கு தடையில் இருந்து விலக்கு: அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

இந்தியாவிற்கு தடையில் இருந்து விலக்கு: அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

Updated : ஜூலை 16, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்: சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுக்க உதவி செய்யும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கினால், தடையில் இருந்து இந்தியாவிற்கு சலுகை அளிப்பதற்கான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.2014ல் கிரிமீயாவை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்து கொண்டதற்காகவும், 2016ல் அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காகவும் ரஷ்யாவிற்கு எதிராக
இந்தியாவிற்கு தடையில்  இருந்து விலக்கு: அமெரிக்க  பார்லி.,யில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுக்க உதவி செய்யும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கினால், தடையில் இருந்து இந்தியாவிற்கு சலுகை அளிப்பதற்கான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



2014ல் கிரிமீயாவை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்து கொண்டதற்காகவும், 2016ல் அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காகவும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது. இதனை மீறி ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கிய துருக்கி மீது கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதனிடையே, ரஷ்யாவிடம் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஐந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு இயந்திரங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்தது.



இந்நிலையில், சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுப்பதற்கு உதவியாக, தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்தை ரோ கண்ணா என்ற எம்.பி., கொண்டு வந்தார்.




latest tamil news

தீர்மானம் தொடர்பாக அவர் கூறியதாவது: சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் இந்தியாவுடன் அமெரிக்கா இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு ஒத்துழைப்பை பலப்படுத்த முயற்சி செய்யவும், சீன எல்லையில் இந்தியா தன்னை தற்காத்து கொள்ளவும் முயற்சி செய்து வருகிறேன். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியமானது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202218:43:49 IST Report Abuse
Krishnan More Indians in US is good for India.
Rate this:
Cancel
Sudhagar Ramaiah - Tiruvannmalai,இந்தியா
15-ஜூலை-202217:43:33 IST Report Abuse
Sudhagar Ramaiah அமெரிக்கா அனுமதி தரவில்லை என்றாலும், இந்தியா அதற்க்கு என்னவேண்டுமோ அதை செய்துகொள்ளும். உங்களின் அனுமதியை எதிர்நோக்கி இருக்கும் காங்கிரஸ் ஆளும் நாடல்ல இந்திய. மோடி எனும் மாமனிதனின் இரும்புக்கரம்.
Rate this:
Cancel
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
15-ஜூலை-202216:34:48 IST Report Abuse
ASIATIC RAMESH தடை பண்ணித்தான் பாருங்களேன் ..... விரைவில் இந்தியா தன்னிறைவு பெற்ற இந்தியாவாக மாறும் ....
Rate this:
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202200:42:13 IST Report Abuse
AkashFirst build toilets for women then talk self reliance...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X