சமீபத்தில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைத்ததுப்படி பல்வேறு பொருட்களுக்கான உயர்த்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த வாரம் அமலுக்கு வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள், ஓட்டல்கள், வங்கி சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் செலவிட வேண்டி இருக்கும்.
ஜூலை 18 முதல் எந்தெந்த பொருட்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., விகிதம் எனும் முழுமையான பட்டியல் இதோ
அச்சு மை, எழுத்து மை, ஓவியம் வரைவதற்கான மை - 18%
கட்டிங் பிளேடுகள் கொண்ட கத்திகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள், ஸ்பூன், முட்கரண்டி, கரண்டி, ஜல்லிக் கரண்டி, கேக் சர்வர்கள் பேக்கரி பொருட்களுக்கு - 18%
நீர் இறைக்கும் பம்புகள், ஆழ்துளை கிணற்றுக்கான டர்பைன் பம்புகள், நீர் மூழ்கி பம்புகள், சைக்கிள் பம்புகள் - 18%
விதைகள், பருப்பு வகைகளை சுத்தப்படுத்த, தரம் பிரிக்க பயன்படும் இயந்திரங்கள், அரைவை தொழில் அல்லது தானியங்களுக்காக பயன்படும் இயந்திரங்கள், வெட் கிரைண்டர்கள் - 18%
எல்.இ.டி., பல்புகள், விளக்குகள் மற்றும் அதனை பொருத்தும் பொருட்கள், சர்க்யூட் போர்டுகள் - 18%
வரைய மற்றும் குறிப்பதற்கு பயன்படும் கருவிகள் - 18%
காசோலைகள் - 18%
சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு - 18%
மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரலாற்று நினைவுச் சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோக ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற ஒப்பந்த பணிகள் மற்றும் துணை ஒப்பந்த பணிகளை செய்து வழங்க - 18%
![]()
|
மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு செய்து தரப்படும் நில வேலை ஒப்பந்தங்களுக்கு - 12%
சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு - 12%
தயாரிக்கப்பட்ட தோல் பொருட்கள், ஷாம்வா தோல், காம்போசிஷன் லெதர் - 12%
வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக் அல்லது அந்த வகையான அனைத்து சார்ட்கள், அட்லஸ், குளோப்கள், சுவர் மேப்களுக்கு - 12%
நாளொன்றுக்கு 1000 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ஓட்டல் அறைகளுக்கு - 12%
ஐ.சி.யூ., அல்லாத மருத்துவமனை அறைகளின் வாடகை நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த தொகைக்கு 5% வரி.