சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மோதல் தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில் , தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்னை ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து, போலீஸ் அறிக்கை, பதில் மனுவுக்கு ஆடு்சேபம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்து உத்தரவிட்டு, தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.