இந்திய -சீன எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு: தலாய் லாமா| Dinamalar

இந்திய -சீன எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு: தலாய் லாமா

Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (1) | |
லடாக்: இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு தரும் என்று திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். சீனா அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 1959 முதல் திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நம் நாட்டில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா அச்சுறுத்தல்
 Use of military force outdated, says Dalai Lama as India stares down China in Ladakh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லடாக்: இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு தரும் என்று திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

சீனா அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 1959 முதல் திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நம் நாட்டில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது வெளியில் வராமல் இருந்த தலாய் லாமா, தற்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் ஒரு மாத பயணமாக காஷ்மீரில் உள்ள லடாக்கிற்கு வருகை தந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தலாய் லாமா அங்கு சென்றுள்ளார். அவரை ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள், துறவிகள் வரவேற்றனர். பின்னர் லே பகுதியில் தான் வசித்து வரும் வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X