”சிங்கிள் தான் கெத்து” : இந்தியர்களின் மனநிலையை வெளிப்படுத்திய சர்வே முடிவுகள்..!| Dinamalar

”சிங்கிள் தான் கெத்து” : இந்தியர்களின் மனநிலையை வெளிப்படுத்திய சர்வே முடிவுகள்..!

Updated : ஜூலை 15, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (7) | |
பெரும்பாலான இந்தியர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், சிங்கிளாகவே வாழ விரும்புவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.2011 -2019ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில், 15 - 29 வயதுடைய திருமணம் ஆகாத இந்தியர்களின் எண்ணிக்கை 17.2 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய இளைஞர் கொள்கை 2014ன்படி, 15 - 29 வயது வரையிலான குடிமக்களை 'இளைஞர்கள்' என
திருமணம், இளைஞர்கள், தேசிய இளைஞர் கொள்கை, சர்வே முடிவு, National Youth Policy, Survey Result, Marriage age, Lifestyle,சிங்கிள்,


பெரும்பாலான இந்தியர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், சிங்கிளாகவே வாழ விரும்புவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.2011 -2019ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில், 15 - 29 வயதுடைய திருமணம் ஆகாத இந்தியர்களின் எண்ணிக்கை 17.2 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய இளைஞர் கொள்கை 2014ன்படி, 15 - 29 வயது வரையிலான குடிமக்களை 'இளைஞர்கள்' என குறிப்பிடப்படுகிறது.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


latest tamil news


15 - 29 வயதிற்குட்பட்ட திருமணம் ஆகாத இளைஞர்களின் எண்ணிக்கை 2011ல் 20.8 சதவீதத்தில் இருந்து 2019ல் 26.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்ற போக்கை பெண்கள் மக்கள்தொகையிலும் காண முடிந்தது. 2011ல் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 13.5 சதவீதத்தில் இருந்து, 2019ல் 19.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இதன்படி, அதிக எண்ணிக்கையில் திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம், டில்லி, பஞ்சாப் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறைந்த திருமணமாகாத இளைஞர்கள் கொண்ட மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளன.குழந்தைகள் திருமணங்கள் குறைவு :latest tamil news


இந்தியாவில் குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் வயது அதிகரித்துள்ளது. 2019-21ம் ஆண்டுகளில், 15 - 19 வயது வரையிலான டீன் ஏஜ் வயதுடைய பெண்களில், முதல் திருமணம் செய்து கொள்வோர் 1.7 சதவீதமாக உள்ளது. இது 2005-2006ம் ஆண்டுகாலத்தில், 11.9 சதவீதமாக இருந்தது.


இதன்படி, திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வயது 25 - 29 ஆக உயர்ந்துள்ளது. 2019- 21ம் ஆண்டுக்கு மத்தியில் 20 வயதிற்குட்பட்ட திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 52.8 ஆக இருந்தது. இதுவே, 2005-2006ம் ஆண்டு காலத்தில் 72.4 சதவீதமாக இருந்தது.சராசரி திருமண வயது அதிகரிப்பு :பெண்களை ஒப்பிடுகையில் ஆண்கள் தாமதாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். 2019 -2021ம் ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 - 29 வயதுடைய ஆண்களில், 25 வயதுக்குள் திருமணம் செய்து கொள்வோர் சதவீதம் 42.9 ஆக உள்ளது. பெண்களோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு குறைவாகும்.


latest tamil news


உயர்கல்வி பயிலும் பெண்கள், சராசரி வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்கின்றனர். 25 - 29 வயதுக்குட்பட்டோரில். பெரும்பாலானோர் பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தவர்களாக உள்ளனர். சராசரி திருமண வயது, ஆரம்பக் கல்வியை முடித்தவர்களுக்கு 1.2 ஆண்டுகளும், பள்ளிக்குச் செல்லாத பெண்களுக்கு 2 ஆண்டுகள் அதிகரித்துள்ளது .


நாட்டில் 20 - 24 வயதுடைய பெண்களின் சதவீதம் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வது கடந்த 15 ஆண்டுகளில் 2005-2006ல் 47 சதவீதத்தில் இருந்து 2019-21ல் 23 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பதின்மவயதில் கர்ப்பம் மற்றும் தாய்மையடைவது 16 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X