பிரதமரை தாக்கும் சதித்திட்டம் : மேலும் ஒரு பயங்கரவாதி கைது

Updated : ஜூலை 15, 2022 | Added : ஜூலை 15, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
பாட்னா: பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய சம்பவத்தில் இன்று மேலும் பயங்கரவாதியை பீஹார் போலீசார் கைது செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பீஹாரின் பாட்னாவில் கடந்த 6, 7ம் தேதிகளில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் கடந்த 11ல், போலீசார் சோதனை
Another accused Marguv Ahmad Danish alias Tahir was arrested last night.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய சம்பவத்தில் இன்று மேலும் பயங்கரவாதியை பீஹார் போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பீஹாரின் பாட்னாவில் கடந்த 6, 7ம் தேதிகளில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் கடந்த 11ல், போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.latest tamil news


இதையடுத்து, அதார் பர்வேஸ், முகமது ஜலாலுதீன் என்ற இரு பயங்கரவாதிகள் கைது செய்யப் பட்டனர்.இதில், ஜலாலுதீன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது. இவருக்கு, 'சிமி' மாணவர் அமைப்புடனும் தொடர்பு உள்ளது. இருவருமே, அமைப்பு ஒன்றுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரித்து வருகிறது. மூன்றாவது பயங்கரவாதியை இவர்கள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று மார்கவ் அகமது தனிஷ் என்ற தாஹிர் என்ற மற்றொரு பயங்கரவாதி கைது செய்யப் பட்டார். இது குறித்து பாட்னா போலீசார் கூறியது, கைதான தாஹிர் கடந்த 2006 முதல் 2020 வரை துபாயில் பணியாற்றியுள்ளார் அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-ஜூலை-202217:07:03 IST Report Abuse
Rafi /////
Rate this:
Cancel
16-ஜூலை-202206:12:02 IST Report Abuse
ஷ்யாம் இந்த பன்றிகளை உயிரோடு விடுவது என்பது நாட்டிற்கே கேடு. பிரதமருக்கே இவர்கள் குறி வைக்கிறார்கள் என்றால் பொதுமக்களின் கதி என்னவென்று யோசியுங்கள்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-ஜூலை-202200:17:35 IST Report Abuse
Aarkay கனவு காணட்டும். எங்கள் பிரதமரை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. மக்கள் அவர் பக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X