புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கூறுகையில், திரவுபதி முர்மு மீது பெரிய மரியாதை வைத்துள்ளோம். இருப்பினும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவாக ஓட்டுப்போட உள்ளோம் என்றார்.
டில்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி உள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிலும் அக்கட்சிக்கு எம்.பி.,க்கள் உள்ளனர்.