கிறிஸ்தவர் எங்கே? முஸ்லிம் எங்கே?: ஆவேசப்பட்ட திமுக எம்.பி.,

Updated : ஜூலை 17, 2022 | Added : ஜூலை 16, 2022 | கருத்துகள் (169) | |
Advertisement
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் ஆவேசமுற்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் ஆவேசமுற்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news



தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு செய்தனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக லோக்சபா எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும் அரசு விழா என்றால் இந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் . இது திராவிட மாடல் அரசு பூஜையை நிறுத்திவிட்டு செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார்.


latest tamil news



தமிழகத்தில் இந்து இன்று சமய அறநிலைத்துறைகுமட்டும் தான் தனியாக அமைச்சர் உள்ளார். இதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல அரசு நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது இஸ்லாமிய., கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பாக வருவாயும் அரசுக்கு வழங்கப்படுவதில்லை. பூமி பூஜை செய்யக்கூடாது என்று கூறும் எம்பி செந்தில் குமார் திமுக தலைவர் ஆன முதல்வர் ஸ்டாலினிடம் இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம் என சொல்ல தைரியம் இருக்கிறதா என்று விழாவில் பங்கேற்ற பலர் முணுமுணுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
21-ஜூலை-202208:27:04 IST Report Abuse
shyamnats 1% கிறிஸ்துவர்கள் மற்றும் 1% முஸ்லிம்களலா எங்கே இருக்கீங்க? தி மு க அரசே எங்களால் தான் ஜெயித்தது , நாங்கள் முப்பது சதவிகிதத்தை தாண்டி விட்டோம் என்று அவர்களே அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-ஜூலை-202210:33:30 IST Report Abuse
Narayanan அந்த விழாவில் கலந்து கொண்ட நண்பர்களில் கிறிஸ்த்துவர்களும், மும்மதியர்களும் கலந்து கொண்டார்கள். இவருக்கு ஐயர் மாதிரி பாதிரியார். மற்றும் இமாம் இல்லயாம். அவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு வழிபட மாட்டார்கள் என்ற சிற்றறிவு இல்லாத எம் பி. அவர்கள் கற்பூரம் எரிக்கமாட்டார்கள். மேலும் அவர்கள் நம் ஆட்களை போல் நாம் கொடுக்கும் பிரசாதத்தை (அவர்கள் கஞ்சி, கேக் கொடுத்தால் நாம் வாங்கிக் கொள்வோம் தானே) வாங்கமாட்டார்கள். என்ன செய்ய முப்பத்தொன்பது எம் பி . .
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
18-ஜூலை-202212:28:57 IST Report Abuse
ram என்ன ஒரு சிறப்பம்சம் என்றால் இந்த அறிவுஜீவி திராவிட கழகத்தை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டது,
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
18-ஜூலை-202219:28:27 IST Report Abuse
N Annamalaiஅவர்கள் பூஜை செய்து தான் கட்டிடம் கட்டுகிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X