கிறிஸ்தவர் எங்கே? முஸ்லிம் எங்கே?: ஆவேசப்பட்ட திமுக எம்.பி., | Dinamalar

கிறிஸ்தவர் எங்கே? முஸ்லிம் எங்கே?: ஆவேசப்பட்ட திமுக எம்.பி.,

Updated : ஜூலை 17, 2022 | Added : ஜூலை 16, 2022 | கருத்துகள் (169) | |
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் ஆவேசமுற்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் ஆவேசமுற்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.




latest tamil news



தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு செய்தனர்.


அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக லோக்சபா எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும் அரசு விழா என்றால் இந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் . இது திராவிட மாடல் அரசு பூஜையை நிறுத்திவிட்டு செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார்.



latest tamil news



தமிழகத்தில் இந்து இன்று சமய அறநிலைத்துறைகுமட்டும் தான் தனியாக அமைச்சர் உள்ளார். இதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல அரசு நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது இஸ்லாமிய., கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பாக வருவாயும் அரசுக்கு வழங்கப்படுவதில்லை. பூமி பூஜை செய்யக்கூடாது என்று கூறும் எம்பி செந்தில் குமார் திமுக தலைவர் ஆன முதல்வர் ஸ்டாலினிடம் இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம் என சொல்ல தைரியம் இருக்கிறதா என்று விழாவில் பங்கேற்ற பலர் முணுமுணுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X