உச்சவரம்பு நில வரன்முறை திட்டம் முடக்கம்

Added : ஜூலை 16, 2022 | |
Advertisement
சென்னை:நில உச்சவரம்பு திட்டத்தில், உபரியாக வரையறுக்கப்பட்ட நிலங்களை வரன்முறை செய்வதில், அரசு மவுனமாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 1978ல் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், உபரியாக 5,883 ஏக்கர் நிலம் அரசுக்கு கிடைத்தது. இந்த நிலங்களை அரசு முறையாக கட்டுப்பாட்டில் எடுத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.இதனால், பழைய

சென்னை:நில உச்சவரம்பு திட்டத்தில், உபரியாக வரையறுக்கப்பட்ட நிலங்களை வரன்முறை செய்வதில், அரசு மவுனமாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில், 1978ல் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், உபரியாக 5,883 ஏக்கர் நிலம் அரசுக்கு கிடைத்தது. இந்த நிலங்களை அரசு முறையாக கட்டுப்பாட்டில் எடுத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.இதனால், பழைய உரிமையாளர்கள், இந்நிலங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டனர்.


இதை வாங்கிய மக்கள், அதில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலங்களின் விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவானாலும், பட்டா மாறுதல் செய்ய முடிவதில்லை. இதனால், இந்நிலங்களை பயன்படுத்தி, வங்கிக் கடன், கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.


அதிகாரம்


இந்த நில பிரச்னைக்கு தீர்வாக, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2008ல் வரன்முறை திட்டம் அறிவிக்கப் பட்டது. இதன்படி, '1994 டிச., 31 வரை கிரையம் பெறப்பட்ட நிலங்கள் வரன்முறை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது.வரன்முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான வரன்முறையை முடிவு எடுக்க, நில நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.கடந்த, 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டன.


'வரன்முறை கட்டணம் மாற்றப்பட உள்ளது; அதுவரை பொறுத்திருங்கள்' என, அப்போது அதிகாரிகள் பதில் தெரிவித்தனர்.இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: உச்சவரம்பு திட்ட உபரி நிலங்கள் வரன்முறை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.


150 கோடி ரூபாய்


இந்த விண்ணப்பங்கள் மீது உரிய முடிவு எடுத்தால், பொது மக்கள் தங்கள் நிலங்களை முறையாக பயன்படுத்த முடியும்; அரசுக்கும் வரன்முறை கட்டணமாக, 150 கோடி ரூபாய் வரை கிடைக்கும். இதுகுறித்து விசாரித்தால், 'அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வருவதற்காக காத்திருக்கிறோம்' என, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இது விஷயத்தில், தமிழக அரசின் மவுனம் எப்போது கலையும் என காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X