சென்னை:நில உச்சவரம்பு திட்டத்தில், உபரியாக வரையறுக்கப்பட்ட நிலங்களை வரன்முறை செய்வதில், அரசு மவுனமாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 1978ல் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், உபரியாக 5,883 ஏக்கர் நிலம் அரசுக்கு கிடைத்தது. இந்த நிலங்களை அரசு முறையாக கட்டுப்பாட்டில் எடுத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.இதனால், பழைய உரிமையாளர்கள், இந்நிலங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டனர்.
இதை வாங்கிய மக்கள், அதில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலங்களின் விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவானாலும், பட்டா மாறுதல் செய்ய முடிவதில்லை. இதனால், இந்நிலங்களை பயன்படுத்தி, வங்கிக் கடன், கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதிகாரம்
இந்த நில பிரச்னைக்கு தீர்வாக, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2008ல் வரன்முறை திட்டம் அறிவிக்கப் பட்டது. இதன்படி, '1994 டிச., 31 வரை கிரையம் பெறப்பட்ட நிலங்கள் வரன்முறை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது.வரன்முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான வரன்முறையை முடிவு எடுக்க, நில நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.கடந்த, 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டன.
'வரன்முறை கட்டணம் மாற்றப்பட உள்ளது; அதுவரை பொறுத்திருங்கள்' என, அப்போது அதிகாரிகள் பதில் தெரிவித்தனர்.இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: உச்சவரம்பு திட்ட உபரி நிலங்கள் வரன்முறை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
150 கோடி ரூபாய்