கவுஹாத்தி : அசாம், அருணாசல பிரதேச முதல்வர்கள், தங்கள் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னையை தீர்க்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.வட கிழக்கு மாநிலங்களான அசாமுக்கும், அருணாசல பிரதேசத்துக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநிலங்களும் 804.1 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவும் தங்கள் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வர திட்டமிட்டனர். இரு மாநிலங்களும், 123 கிராமங்களை தங்களுக்கு உரியவை என சொந்தம்கொண்டாடி வந்தன.
![]()
|
அவற்றில், 37 கிராமங்களின் நிலைப்பாடு குறித்து, இரு தரப்புக்கும் இடையே சுமுக முடிவு ஏற்பட்டதால், அந்த எண்ணிக்கை ௮௬ ஆக குறைந்தது. இதையடுத்து, இரு மாநில முதல்வர்களும் அருணாசல பிரதேசத்தில் உள்ள நம்சாய் நகரில் சந்தித்து, இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, தனது 'டுவிட்டர்' பக்கத்தில், 'நீண்டகாலமாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்கும் முயற்சியில் இது ஒரு மைல்கல். சர்ச்சைக்குரிய மற்ற கிராமங்கள் விவகாரத்தை வரும் செப்டம்பர் 15க்குள் தீர்க்க முயல்வோம்' என, பதிவிட்டுள்ளார்.