குன்னுார் : குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் யானைகள் உலா வருவதால் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் பலா சீசனால் காட்டு யானைகள்பல இடங்களிலும் முகாமிட்டுள்ளன.
அதில் ஒரு கொம்பு உடைந்த குள்ள யானை உட்பட 10 யானைகள் பர்லியார் சாலை யோரத்தில் முகாமிட்டுள்ளன.மரப்பாலம் ஈச்சமரம் பகுதியில் ஒரு குட்டி கொம்பன் பலா பழங்களை ருசித்து வருகிறது. நேற்று மதியம் சாலையை கடந்த இந்த யானை வாகனங்களை விரட்டியது.யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி போட்டோ 'செல்பி' எடுத்து வருவதால் அவர்களை யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது.
![]()
|
வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தி 'போட்டோ' எடுப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை இயக்கும் போது முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்' என்றனர்.